மதுரை ஹெச்.எம்.எஸ். காலனியைச் சேர்ந்த பாக்கியலட்சுமி சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் ஆட்கொணர்வு மனுவினை தாக்கல் செய்திருந்தார். அதில், "எனது கணவர் பிரசாத் கடந்த 13 ஆண்டுகளாக நகை பட்டறை வைத்து நகை வியாபாரம் செய்துவந்த நிலையில் கடந்த அக்டோபர் 13ஆம் தேதி இரவு, சீருடை இன்றி வந்த மூன்று பேர் தங்களை காவல் துறையினர் எனக் கூறி திருச்சி லலிதா ஜுவல்லரியில் நடைபெற்ற திருட்டு தொடர்பாக விசாரிக்க வேண்டுமெனக் கூறி அழைத்துச் சென்றனர்.
அவர்களிடம் இது குறித்த கூடுதல் தகவலை கேட்டபோது திருச்சி கோட்டை காவல்நிலைய ஆய்வாளரிடம் கேட்குமாறு தெரிவித்தனர். அதைத்தொடர்ந்து திருச்சி, கோட்டை காவல் நிலைய ஆய்வாளரிடம் கேட்டபோது அது தொடர்பாக தனக்கு எந்த விபரமும் தெரியாது எனக் கூறிவிட்டார்.
இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்தபோது ஏற்க மறுத்துவிட்டனர். ஆகவே, எனது கணவரை கண்டுபிடித்து ஆஜர்படுத்த உத்தரவிட வேண்டும்" எனக் கூறியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் வைத்தியநாதன், ஆனந்த் வெங்கடேஷ் அமர்வு, இது தொடர்பாக திருச்சி காவல் கண்காணிப்பாளருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.
இதையும் படிங்க:
சவடு மண் அள்ளுவதற்கு தடை கோரிய வழக்கு: நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரிக்கும் - உயர் நீதிமன்றம்