ETV Bharat / state

நாகர்கோவில் பார் கவுன்சிலுக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

பிணை வழக்கில் நாகர்கோவில் மாவட்ட நீதிமன்ற பார் கவுன்சில் வழக்கறிஞர்கள் ஆஜராக கூடாது என தீர்மானம் நிறைவேற்றியது தொடர்பாக நாகர்கோவில் பார் கவுன்சில், தமிழ்நாடு பார் கவுன்சில் செயலர் பதிலளிக்க உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

high court madurai branch  nagarkovil bar council  bar council  high court madurai branch orderd to nagarkovil bar council  jamin case  jamin  court news  madurai news  madurai latest news  மதுரை செய்திகள்  பிணை  ஜாமின்  நாகர்கோவில் பார் கவுன்சில்  தமிழ்நாடு பார் கவுன்சில்  உயர்நீதிமன்ற மதுரைக்கிளை
உயர்நீதிமன்ற மதுரைக்கிளை
author img

By

Published : Sep 26, 2021, 7:17 AM IST

மதுரை: கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த விஜய்சாரதி, துரைராஜ் ஆகியோர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பிணை மனு தாக்கல் செய்தனர்.

அதில், "நாங்கள் இருவரும் வழக்கறிஞரின் சகோதரரை தாக்கியதாக எங்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. வழக்கறிஞரின் சகோதரர் என்பதால் எங்கள் பிணை மனுவில் வழக்கறிஞர் ஆஜராகக்கூடாது என நாகர்கோவில் வழக்கறிஞர் பார் கவுன்சில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. இதனால், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பிணை கோரி மனு தாக்கல் செய்துள்ளோம்" என கூறியிருந்தனர்.

பிணை வழங்கப்பட்டது

இந்த மனு நீதிபதி புகழேந்தி முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில், “தாக்கப்பட்டதாக கூறும் நபர் எந்த ஒரு மருத்துவமனையிலும் சிகிச்சை அளித்ததற்கான சாட்சியங்கள் இல்லை” என கூறப்பட்டது.

அப்போது நீதிபதி, “இந்த வழக்கில் நாகர்கோவியில் பார் கவுன்சில், தமிழ்நாடு பார் கவுன்சில் செயலர் ஆகியோரை இந்த வழக்கில் சேர்க்கப்படுகிறார்கள்.

வழக்கு குறித்து நாகர்கோவில் பார் கவுன்சில், தமிழ்நாடு பார் கவுன்சில் செயலர், கன்னியாகுமரி தெற்கு தாமரைக்குளம் காவல் ஆய்வாளர் பதிலளிக்க வேண்டும். விசாரணைக்கு அழைக்கும் போது இருவரும் ஆஜராக வேண்டும்” என நிபந்தனை விதித்து பிணை வழங்கி உத்தரவிட்டார்.

இதையும் படிங்க: பேரறிவாளனுக்கு 5ஆவது முறையாக பரோல் நீட்டிப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.