ETV Bharat / state

கோயில்களில் செல்போனுக்குத் தடை விதிக்க உத்தரவு - உயர்நீதிமன்ற மதுரை கிளை

தமிழகத்தில் உள்ள அனைத்து கோயில்களிலும் செல்போன் பயன்பாட்டிற்கு தடை விதித்து இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் உத்தரவிட வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

high court madurai branch  ban cell phones in temples  cell phones in temples  cell phones  high court  madurai  செல்போனுக்கு தடை  கோயில்களில் செல்போனுக்கு தடை  அறநிலையத்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு  உயர்நீதிமன்ற மதுரை கிளை  செல்போன் பயன்பாட்டிற்கு தடை
கோயில்களில் செல்போனுக்கு தடை
author img

By

Published : Dec 2, 2022, 9:57 PM IST

மதுரை: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலின் அர்ச்சகரான சீதாராமன் சென்னை உயர் நீதிமன்றம் மதுரைக்கிளையில் பொதுநல மனு ஒன்று தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில், "கோயில்களின் சிலைகளின் பாதுகாப்பு மற்றும் பிற காரணங்களினால் புகைப்படம் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தரிசனம் செய்ய வருகின்ற பக்தர்களுக்கு இடையூறாக சில அர்ச்சகர்களும், செக்யூரிட்டிகளும் செல்போன்கள் மூலம் சாமிக்கு செய்யப்படும் அபிஷேகம், பூஜைகளை புகைப்படம் எடுத்தும், செல்ஃபி எடுத்தும் வருகின்றனர். எனவே கோயிலுக்குள் செல்போன் பயன்படுத்தத் தடை விதிக்க வேண்டும்" எனக் கோரி இருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஜெ.சத்யநாராயண பிரசாத் ஆகியோர் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது, அறநிலையத்துறை சார்பாக விவாதித்த வழக்கறிஞர், “அனைத்து கோயில்களிலும் செல்போன் பயன்படுத்தப்படுகிறது. கோயில் சிலைகளுக்கு முன் நின்று செல்ஃபி எடுத்து அதனை சமூக வலைதளங்களில் பதிவிடுவது தொடர் கதையாகி வருகிறது. இதுமட்டுமல்லாமல் அந்த கோயிலில் அர்ச்சகர்களாக இருக்கக்கூடியவர்களே கோயிலுக்குள் செல்ஃபி எடுத்துக்கொண்டு தங்களின் யூடியூப் பக்கத்தில் பதிவேற்றம் செய்கின்றனர்” என்றார்.

இதனையடுத்து, ’திருச்செந்தூர் கோயிலுக்குள் செல்போன் எடுத்துச்செல்ல உடனடியாக தடை விதிக்கப்படுகிறது. இந்த சுற்றறிக்கையை இந்து அறநிலையத்துறை உடனடியாக அமல்படுத்த வேண்டும். தடையை மீறி செல்போன் பயன்படுத்தினால் பறிமுதல் செய்யப்பட்டு திருப்பி அளிக்கக்கூடாது. குறிப்பாக கோயிலுக்குள் செல்போன் எடுத்துச்செல்ல அர்ச்சகர்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறை அமல்படுத்தப்பட்டதற்கான நகலை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உத்தரவிட்டு’ நீதிபதிகள் வழக்கை ஒத்திவைத்தனர்.

இந்நிலையில் இந்த வழக்கு இன்று உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், தமிழகத்தின் அனைத்து கோயில்களிலும் செல்போன் பயன்படுத்தத் தடை விதித்து உத்தரவிட்டனர். கோயில்களின் புனிதம் மற்றும் தூய்மையைக் காக்கும் விதமாக இந்த உத்தரவுகளை அனைத்து கோயில்களிலும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று நீதிபதிகள் கூறினர்.

இதையும் படிங்க: தாமிரபரணியா? பொருநையா?: பெயர் மாற்ற விவகாரம் - மாநில அரசு பதிலளிக்க உத்தரவு

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.