ETV Bharat / state

மணல் திருட்டு வழக்கு: ஆட்சியரிடம் சரமாரியாக கேள்வி எழுப்பிய நீதிபதிகள்

மதுரை: மணல் திருட்டு வழக்குகளில் எத்தனை பேர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என உயர் நீதிமன்ற மதுரைக் கிளை கேள்வி எழுப்பியுள்ளது.

High Court has questioned how many people have been prosecuted in sand theft cases

author img

By

Published : Sep 24, 2020, 9:10 PM IST

சட்டவிரோதமாக மணல் குவாரி அமைத்து மண் அள்ளி வருவதை தடுக்கக்கோரி நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் தாலுகா தெற்கு கல்லிடைக்குறிச்சியைச் சேர்ந்த சிவசங்கரன் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு இன்று நீதிபதிகள் சத்தியநாராயணன், ராஜமாணிக்கம் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அந்த விசாரணையின்போது நெல்லை மாவட்ட ஆட்சித் தலைவர் ஷில்பா பிரபாகரன், காவல் துறை கண்காணிப்பாளர் மணிவண்ணன் ஆகியோர் காணொலி காட்சி மூலம் ஆஜராகி அறிக்கை தாக்கல்செய்தனர்.

அந்த அறிக்கையில், கடந்த 3 மாதத்திற்கு முன்பாக m-sand குவாரி அமைக்க அனுமதி பெற்று சட்டவிரோதமாக மணல் குவாரி நடத்தியது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் பல கோடி ரூபாய் அபராதம் விதித்து உள்ளதாகவும், இது சம்பந்தமாக கிராம நிர்வாக அலுவலர் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர். மேலும் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தகவல் கூறினர்.

இதனைத் தொடர்ந்து நீதிபதிகள் மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளரிடம் சரமாரியாக கேள்விகளை எழுப்பினர். அந்தக் கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் மாவட்ட ஆட்சியரும், காவல் துறை கண்காணிப்பாளரும் திணறினர்.

அதில், ''பல கோடி ரூபாய் அபராதம் விதிக்கும் அளவிற்கு மணல் கொள்ளை நடைபெற்று உள்ளது. இந்த அளவிற்கு மணல் கொள்ளை நடைபெறும் வரை மாவட்ட நிர்வாகம் என்ன செய்தது? பல்லாயிரக்கணக்கான டன் கணக்கில் மணல் கொள்ளை நடைபெற்றது தெளிவாகத் தெரிகிறது. இவ்வளவு மணல் கொள்ளை நடந்துள்ள சூழலில் கிராம நிர்வாக அலுவலர் மீது மட்டும் நடவடிக்கை எடுக்காததற்கான காரணம் என்ன? எத்தனை டன் மணல் கொள்ளை போயிருக்கும்?

கனிம வளத்துறை, வருவாய்த் துறை, காவல் துறை, மாவட்ட அளவிலான உயர் அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்காததற்கான காரணம் என்ன? இந்த வழக்கில் எத்தனை லாரிகள் பறிமுதல்செய்யப்பட்டன? மணல் அள்ளுவதற்கு பயன்படுத்தப்பட்ட எத்தனை பொக்லைன் இயந்திரங்கள் பறிமுதல்செய்யப்பட்டுள்ளன? லாரிகள், உபகரணங்கள் பறிமுதல் செய்யவில்லை என்றால் அதற்கான காரணம் என்ன?

எத்தனை பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது? அவர்களில் எத்தனை பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது? மேலும் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படவில்லை என்றால் அதற்கான காரணம் என்ன? வாகனங்களை பறிமுதல் செய்யவும், மணல் கடத்தலில் ஈடுபடுவோர் மீது குண்டர் சட்டத்தில் வழக்குப்பதிவு செய்ய உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு இரண்டு வருடங்களாகியும் மாவட்ட நிர்வாகம் என்ன செய்து கொண்டிருந்தது?

மாவட்ட ஆட்சியர் அபராதம் விதிப்பது வெறும் பேப்பர் அளவில் மட்டுமே நடைமுறைப்படுத்துவது இல்லை? இவ்வளவு பெரிய மணல் கொள்ளை நடைபெற்றுள்ளது. இதற்கு காவல்துறை அலுவலர்கள், கனிம வளத்துறை அலுவலர்கள் உடந்தையாக இருந்திருப்பார்கள் அவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது?

மேலும் இந்த மாவட்டம் மட்டுமின்றி சிவகங்கை மாவட்டத்திலும் இதே நிலைதான் நடந்துவருகிறது எனத் தெரிவித்த நீதிபதிகள், இது போன்று நீதிமன்ற உத்தரவை சுட்டிக்காட்டி பல்வேறு கேள்விகளை எழுப்பினர்.

இதற்கு மாவட்ட ஆட்சித்தலைவர் ஷில்பா, மணல் கொள்ளையில் ஈடுபட்டவர்களுக்கு உதவியாக இருந்த கனிமவளத் துறை, வருவாய்த் துறை, காவல் துறை அலுவலர்கள் மீது லஞ்ச ஒழிப்பு துறை விசாரணை நடத்துவது குறித்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதியளித்தார்.

இதனைத் தொடர்ந்து நீதிபதிகள் கேள்விகளுக்கான பதிலை அறிக்கையாக தாக்கல் செய்யக்கோரி வழக்கு விசாரணையை அக்டோபர் 11ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

இதையும் படிங்க: வீட்டில் பதுக்கிவைக்கப்பட்டிருந்த 74 சிலைகள் பறிமுதல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.