கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உயர் நீதிமன்றம் மற்றும் அதன் கிளையில் அவசர வழக்குகள் மட்டுமே விசாரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் வரும் மார்ச் 18ஆம் தேதி முதல் அனைத்து வழக்குகளின் முக்கியமான புதிய வழக்குகள் மட்டுமே விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும். வழக்குரைஞர்கள் மட்டும்தான், நீதிமன்றத்திற்கு வர வேண்டும். மனுதாரர்களை நீதிமன்றத்திற்கு வர சொல்லக் கூடாது.
மூன்று வாரங்களுக்குப் பார்வையாளர் அனுமதி சீட்டு வழங்கப்பட மாட்டாது. மேலும் உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள உணவகங்கள், தேநீர் கடைகளை மூடவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
உரிய வேலை இல்லாத நேரங்களில் வழக்குரைஞர்கள் நீதிமன்ற வளாகத்தில் கூடி இருக்கக் கூடாது. அடுத்த மூன்று வாரங்களுக்கு இதைக் கடைப்பிடிக்க வேண்டும் என நீதிமன்றங்கள் அறிவுறுத்தின.
இந்த அறிவுறுத்தல்கள் ஏ.பி. சாஹி தலைமையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் எடுக்கப்பட்டதாக வழக்குரைஞர் சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.
இதையும் படிங்க... நோயாளிகளுக்கு ஆக்சிஜன் வழங்குவதற்கு முன்பு முறையான சோதனைகள் மேற்கொள்ளப்படுகிறதா? - உயர் நீதிமன்றம் கேள்வி