ETV Bharat / state

கல்வெட்டுகளைப் பாதுகாக்க என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன? உயர் நீதிமன்றம் கேள்வி - கல்வெட்டுகளை பாதுகாக்க என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன

மதுரை: தமிழ்நாட்டின் வரலாற்றை பாதுகாக்கும் வகையில், மைசூரில் உள்ள கல்வெட்டுத் துறையில் உள்ள தமிழ் கல்வெட்டு படிமங்களை பாதுகாக்க, படிக்க, புதிப்பிக்க எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கை என்ன என்பது குறித்து மத்திய தொல்லியல்துறை பதிலளிக்க உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தவிட்டுள்ளது.

hc
author img

By

Published : Sep 25, 2019, 6:14 PM IST

தமிழ்நாட்டின் வரலாற்றை பாதுகாக்கும் வகையில், மத்திய தொல்லியல் துறை வசம் மைசூரில் உள்ள கல்வெட்டுத் துறையில் உள்ள தமிழ் கல்வெட்டு படிமங்களை, தமிழ்நாட்டு தொல்லியல் துறைக்கு மாற்றி வழங்க உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என கோரி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மணிமாறண் என்பவர் பொதுநல மனுத் தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுபில், மத்திய தொல்லியல் துறையின் கட்டுபாட்டில் உள்ள கல்வெட்டுத் துறை மைசூரில் உள்ளது. அந்த அலுவலகத்தில் தென்னிந்தியாவில் உள்ள கல்வெட்டுகள், வரலாற்று ஆவணங்களான பனை ஓலை, செப்பேடுகள் போன்றவை படிமம் எடுக்கப்பட்டு பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளன.

அவை தமிழ்நாட்டின், தமிழர்களின் அரசியல், சமுதாய வரலாற்றை அறிவியல் பூர்வமாக உறுதிப்படுத்துவதற்கு ஆதாரமாக உள்ளன. ஆனால் தமிழ்நாட்டின் கோவில்கள், குளங்கள், சத்திரங்கள், குகைகள் உள்ளிட்ட பகுதிகளில் வரலாற்று சான்றாக விளங்கும் கல்வெட்டுகளின் படிமங்களை Ink copy மூலம் எடுத்து ஆவணப்படுத்தி வைத்துள்ளனர்.

மைசூரில் உள்ள கல்வெட்டு துறை அலுவலகத்தை, பழைய கட்டடத்தில் இருந்து புதிய கட்டடத்திற்கு மாற்றிய போது தமிழ் கலவெட்டுகளை படிமம் எடுத்த போது அவை பெரும்பாலானவை சேதமடைந்து விட்டன. இவற்றின் ஆயுட்காலம் 75 ஆண்டுகள் ஆகும். ஆயிரக்கணக்கான தமிழ் கல்வெட்டுகளின் படிமம் எடுத்தவற்றை அவற்றில் என்ன கூறி உள்ளது என படித்து, அதை அறிவியல் முறையில் பாதுகாத்து, அதில் உள்ள வரலாற்று சான்றுகளை புத்தகமாக, பதிப்பித்து டிஜிட்டல் முறையில் ஆவணப் படுத்த வேண்டும்.

ஆனால் பல ஆண்டுகளாக தமிழ் கல்வெட்டுகள், படித்து, பாதுகாத்து, பதிப்பிக்கவில்லை. இதனால் தமிழர்களின் வரலாறு, வருங்கால தலைமுறையினருக்கு தெரியாமல் அழிந்து விடும். தமிழ்நாட்டின் வரலாற்றை பாதுகாக்கும் வகையில் மத்திய தொல்லியல் துறை வசம் மைசூரில் உள்ள கல்வெட்டுத் துறையில் உள்ள தமிழ் கல்வெட்டு படிமங்களை, தமிழக தொல்லியல் துறைக்கு மாற்றி வழங்க உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு இன்று நீதிபதிகள் சிவஞானம், தாரணி அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிபதிகள் தமிழ்நாட்டு கல்வெட்டுகளில் இருந்து எடுக்கப்பட்ட படிமங்களை பாதுகாக்க, படிக்க, புதிப்பிக்க எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கை என்ன? தமிழ்நாட்டில் உள்ள புரதான சின்னங்களை, கல்வெட்டுகளை பாதுகாக்க மத்திய அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என கேள்வி எழுப்பினர்.

மேலும் இது குறித்து மத்திய தொல்லியல் துறை பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டு வழக்கு விசாரணையை அக்டோபர் 22ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

Intro:கல்வெட்டுகளை பாதுகாக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி

தமிழக வரலாற்றை பாதுகாக்கும் வகையில் , மத்திய தொல்லியல் துறை வசம் மைசூரில் உள்ள கல்வெட்டு துறையில் உள்ள தமிழ் கல்வெட்டு படிமங்களை, தமிழக தொல்லியல் துறைக்கு Body:கல்வெட்டுகளை பாதுகாக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி

தமிழக வரலாற்றை பாதுகாக்கும் வகையில் , மத்திய தொல்லியல் துறை வசம் மைசூரில் உள்ள கல்வெட்டு துறையில் உள்ள தமிழ் கல்வெட்டு படிமங்களை, தமிழக தொல்லியல் துறைக்கு மாற்றி வழங்க உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என கோரிய பொது நல மனுவில், தமிழக கல்வெட்டுகளில் இருந்து எடுக்கப்பட்ட படிமங்களை பாதுகாக்க, படிக்க, புதிப்பிக்க எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கை என்ன? இது குறித்து பதில் மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.

தமிழகத்தில் உள்ள புரதான சின்னங்களை , கல்வெட்டுகளை பாதுகாக்க மத்திய அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது ? நீதிபதிகள் கேள்வி?

மத்திய தொல்லியல் துறையின் கட்டுபாட்டில் உள்ள. கல்வெட்டு துறை மைசூரில் உள்ளது. இந்த மைசூர் அலுவலகத்தில் தென்
இந்தியாவில் உள்ள கல்வெட்டுகள்,வரலாற்று ஆவணங்களான பனை ஓலை, செப்பேடுகள் போன்றவை படிமம் எடுக்கப்பட்டு பாதிகாத்து வைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தின்,தமிழர்களின் அரசியல், சமுதாய வரலாற்றை அறிவியல் பூர்வமாக உறுதி படுத்துவதற்கு ஆதாரமாக உள்ளது.ஆனால் தமிழகத்தின் கோவில்கள்,குளங்கள், சத்திரங்கள் ,குகைகள் உள்ளிட்ட பகுதிகளில் வரலாற்று சான்றாக விளங்கும் கல்வெட்டுகளின், படிமங்களை ( Ink copy) மூலம் எடுத்து Estamage எனப்படும் ஆவணப்படுத்தி வைத்துள்ளனர். மைசூரில் உள்ள கல்வெட்டு துறை அலுவலகத்தை,பழைய கட்டடத்தில் இருந்து புதிய கட்டடத்திற்கு மாற்றிய போது தமிழ் கலவெட்டுகளை படிமம் எடுத்த போது அவை பெரும்பாலானவை சேதமடைந்து விட்டன. இவற்றின் ஆயுட்காலம் 75 ஆண்டுகள் ஆகும்.
ஆயிரக்கணக்கான தமிழ் கல்வெட்டுகளின் படிமம் எடுத்ததை இது வரை கல்வெட்டில் என்ன கூறி உள்ளது என படித்து, அதை அறிவியல் முறையில் பாதுகாத்து, அதில் உள்ள வரலாற்று சான்றுகளை புத்தகமாக, பதிப்பித்து டிஜிட்டல் முறையில் ஆவண படுத்த வேண்டும் .. ஆனால் பல ஆண்டுகளாக தமிழ் கல்வெட்டுகள்,படித்து, பாதுகாத்து,பதிப்பிக்கவில்லை .. இதனால் தமிழர்களின் வரலாறு, வருங்காலா
தலைமுறையினருக்கு தெரியாமல் அழிந்து விடும் ..
தமிழக வரலாற்றை பாதுகாக்கும் வகையில் மத்திய தொல்லியல் துறை வசம் மைசூரில் உள்ள கல்வெட்டு துறையில் உள்ள தமிழ் கல்வெட்டு படிமங்களை, தமிழக தொல்லியல் துறைக்கு மாற்றி வழங்க உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என மனுவில் கூறியிருந்தார் ...

இந்த மனு இன்று நீதிபதிகள் சிவஞானம், தாரணி அமர்வு முன் விசாரணைக்கு வந்தது ...அப்போது நீதிபதிபதிகள் பிறப்பித்த உத்தரவு . தமிழக கல்வெட்டுகளில் இருந்து எடுக்கப்பட்ட படிம ங்களை பாதுகாக்க, படிக்க, புதிப்பிக்க எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கை என்ன? தமிழகத்தில் உள்ள புரதான சின்னங்களை, கல்வெட்டுகளை பாதுகாக்க மத்திய அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என கேள்வி எழுப்பிய நீதிபதிகள் இது குறித்து மத்திய தொல்லியல் துறை பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டு வழக்கு விசாரணையை அக்டோபர் 22 ம் தேதி ஒத்திவைத்தனர் .Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.