ETV Bharat / state

மறைமுகத் தேர்தலில் வீடியோ பதிவு செய்யப்படும்: தேர்தல் ஆணையம் - மறைமுக தேர்தலில் வீடியோ பதிவு செய்யப்படும்

மதுரை: மறைமுகத் தேர்தல் முழுவதுமாக வீடியோ பதிவு செய்யப்படும் என தமிழ்நாடு தேர்தல் ஆணையம் உறுதியளித்துள்ளது.

உயர் நீதிமன்றம் மதுரை கிளை
உயர் நீதிமன்றம் மதுரை கிளை
author img

By

Published : Jan 9, 2020, 8:47 PM IST

தமிழ்நாடு முழுவதும் ஜனவரி 11ஆம் தேதி நடைபெறவுள்ள மறைமுக தேர்தல், முழுவதுமாக வீடியோ பதிவு செய்யப்படும். இது தொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் இன்றே அறிவுறுத்தல் வழங்கப்படும் என உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தமிழ்நாடு தேர்தல் ஆணையம் உறுதியளித்துள்ளது.

திண்டுக்கல்லைச் சேர்ந்த லலிதா என்பவர், உயர் நீதிமன்றம் மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில்," திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை பஞ்சாயத்து யூனியனில் ஊராட்சி மன்றத் தலைவர், துணைத் தலைவர், ஒன்றியக் குழு தலைவர், துணைத் தலைவர் பதவிகளுக்கான தேர்தல் நடைபெறவுள்ளது.

இந்தத் தேர்தல் நியாயமான முறையில் நடைபெறுமா? என சந்தேகம் உள்ளதால், தேர்தலை முழுமையாக வீடியோ பதிவு செய்ய உத்தரவிட வேண்டும்" எனக் கூறியிருந்தார்.

இதேபோல '' முதுகுளத்தூரைச் சேர்ந்த முருகனும் 11ஆம் தேதி நடைபெறும் தேர்தலை முழுமையாக வழக்கறிஞர் ஆணையர் குழு அமைத்து வீடியோ பதிவு செய்ய உத்தரவிட வேண்டும்" எனக் கூறியிருந்தார்.

இந்த வழக்குகள் நீதிபதிகள் துரைசுவாமி, ரவீந்திரன் அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் தமிழ்நாடு தேர்தல் ஆணையம் தரப்பில் தேவைப்படும் இடங்களில் வீடியோ பதிவு செய்யலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது ஏற்கத்தக்கதல்ல, ஆகவே அனைத்து இடங்களிலும் தேர்தலை வீடியோ பதிவு செய்ய உத்தரவிட வேண்டும் என வாதிட்டார்.

இதையடுத்து நீதிபதி அனைத்து இடங்களிலும் தேர்தலை வீடியோ பதிவு செய்யலாமே? என கேள்வி எழுப்பினார். இதற்கு தேர்தல் ஆணையம் தரப்பில் தமிழ்நாடு முழுவதும் 11ஆம் தேதி நடைபெறவுள்ள மறைமுகத் தேர்தல் வீடியோ பதிவு செய்யப்படும். அது தொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு இன்றே அறிவுறுத்தப்படும் என உறுதியளிக்கப்பட்டது.

இதனைப் பதிவு செய்துகொண்ட நீதிபதிகள் உத்தரவு நிறைவேற்றப்பட்டது தொடர்பாக தேர்தல் ஆணையம் தரப்பில் ஜனவரி 21ஆம் தேதி பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்தனர்.

இதையும் படிங்க: ஒன்றியக்குழு தலைவர் பதவிக்கு மல்லுக்கட்டும் திமுக

Intro:தமிழகம் முழுவதும் ஜனவரி 11-ஆம் தேதி நடைபெற உள்ள மறைமுக தேர்தல் முழுவதுமாக வீடியோ பதிவு செய்யப்படும் இது தொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் இன்றே அறிவுறுத்தல் வழங்கப்படும் - உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தமிழக தேர்தல் ஆணையம் தரப்பில் உறுதி
Body:தமிழகம் முழுவதும் ஜனவரி 11-ஆம் தேதி நடைபெற உள்ள மறைமுக தேர்தல் முழுவதுமாக வீடியோ பதிவு செய்யப்படும் இது தொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் இன்றே அறிவுறுத்தல் வழங்கப்படும் - உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தமிழக தேர்தல் ஆணையம் தரப்பில் உறுதி

திண்டுக்கல்லைச் சேர்ந்த லலிதா உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில்," திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை பஞ்சாயத்து யூனியனில் ஊராட்சி மன்ற தலைவர், துணைத் தலைவர் மற்றும் ஒன்றியக் குழு, தலைவர் துணைத் தலைவர் பதவிகளுக்கான தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தல் நியாயமான முறையில் நடைபெறுமா? என சந்தேகம் உள்ளதால், தேர்தலை முழுமையாக வீடியோ பதிவு செய்ய உத்தரவிட வேண்டும்" எனக் கூறியிருந்தார். இதேபோல முதுகுளத்துரைச் சேர்ந்த முருகனும் 11 தேதி நடைபெறும் தேர்தலை முழுமையாக வழக்கறிஞர் ஆணையர் குழு அமைத்து வீடியோ பதிவு செய்ய உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.

இந்த வழக்குகள் நீதிபதிகள் துரைசுவாமி ரவீந்திரன் அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் தமிழக தேர்தல் ஆணையம் தரப்பில் தேவைப்படும் இடங்களில் வீடியோ பதிவு செய்யலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது ஏற்கத்தக்கதல்ல ஆகவே அனைத்து இடங்களிலும் தேர்தலை வீடியோ பதிவு செய்ய உத்தரவிட வேண்டும் என வாதிட்டார்.
இதையடுத்து நீதிபதி அனைத்து இடங்களிலும் தேர்தலை வீடியோ பதிவு செய்யலாமே? என கேள்வி எழுப்பினார். இதையடுத்து தேர்தல் ஆணையம் தரப்பில் தமிழகம் முழுவதும் 11 தேதி நடைபெற உள்ள மறைமுக தேர்தல் வீடியோ பதிவு செய்யப்படும் அது தொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு இன்றே அறிவுறுத்தப்படும் என உறுதி அளிக்கப்பட்டது இதனைப் பதிவு செய்துகொண்ட நீதிபதிகள் உத்தரவு நிறைவேற்றப்பட்டது தொடர்பாக தேர்தல் ஆணையம் தரப்பில் ஜனவரி 21ல் பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்துள்ளனர்Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.