சென்னை வானிலை ஆய்வு மையம் முன்னரே அறிவிப்பு செய்ததன் அடிப்படையில் இன்று (நவம்பர் 6) அதிகாலை முதல் மதுரை மாநகர், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது.
இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. வெளி வீதிகள், மாசி வீதிகள், தல்லாகுளம், வண்டியூர், அனுப்பானடி, அண்ணாநகர், கேகே நகர், காமராஜர் சாலை, அரசரடி, காளவாசல், பழங்காநத்தம், நாகமலை, திருப்பரங்குன்றம், திருநகர் உள்ளிட்ட பகுதிகளில் பெய்து வரும் மழையால் தெருக்களில் மழைநீர் சூழ்ந்துள்ளது.
இதன் காரணமாக இரு சக்கர, நான்கு சக்கர வாகன ஓட்டிகள் மிக சிரமப்பட்டனர். நேற்று (நவம்பர் 5) மதுரை மாவட்டத்தில் மொத்தம் 179.40 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. சராசரியாக 9 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
அதிகபட்சமாக கள்ளிக்குடியில் 38.60 மில்லி மீட்டர் மழையும் பேரையூர் மற்றும் மேட்டுப்பட்டியில் குறைந்தபட்ச மழை அளவாக 2 மில்லிமீட்டர் பெய்துள்ளது.