ETV Bharat / state

கைதிகளின் ஊதியத்தில் நிவாரண நிதி பிடித்தம்: பாதிக்கப்பட்டோருக்கு முறையாக வழங்கப்படுகிறதா?

மதுரை: சிறைகளில் தண்டனைக் கைதிகளின் ஊதியத்தில் பிடிக்கப்பட்ட நிவாரண நிதியை பாதிக்கப்பட்டோருக்கு முறையாக வழங்க உத்தரவிடக் கோரிய வழக்கில், சிறை நிர்வாகம் உரிய முடிவு எடுக்க வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தவிட்டுள்ளது.

hc
உயர் நீதிமன்ற மதுரை கிளை
author img

By

Published : Feb 15, 2021, 10:43 PM IST

மதுரை, சின்னசொக்கிகுளத்தைச் சேர்ந்த ராஜா என்பவர், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், 'தமிழ்நாடு சிறைகளில் தண்டனை கைதிகள் செய்யும் வேலைக்காக வழங்கப்படும் ஊதியத்தில் 20 விழுக்காடு பாதிக்கப்பட்டோர் நிவாரண நிதிக்காக பிடித்தம் செய்யப்படுகிறது. பிடித்தம் செய்யும் பணம் முறையே பாதிக்கப்பட்டோரின் குடும்பத்தினருக்கு வழங்கப்படுவதில்லை. இதனால் அவர்களது மறுவாழ்வு பணி பாதிக்கிறது.

எனவே, நிலுவையிலுள்ள பாதிக்கப்பட்டோருக்கான நிவாரண நிதியை உடனடியாக வழங்கவும், உரிய நேரத்தில் வழங்க வேண்டும் என்பதை உறுதி படுத்தவும், இதற்கான பணிகளை மேற்கொள்ள உரிய காலக்கெடுவை நிர்ணயிக்கவும், நிதியை அதிகரிக்கவும் உத்தரவிட வேண்டும்’ என்று கூறியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், எஸ்.ஆனந்தி ஆகியோர் அமர்வு, மனுதாரர் கோரிக்கை குறித்து சட்டத்திற்கு உட்பட்டு பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த உத்தரவை நிறைவேற்றியது குறித்து அறிக்கை தயார் செய்து ஏப்.5இல் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர்.

இதையும் படிங்க:தபால் வாக்காளர்கள் பட்டியல் வேண்டும் - கே.என். நேரு மனு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.