ETV Bharat / state

ராச ராச சோழனின் வரலாற்றைத் தெரிந்து கொள்ள சிறப்பு ஆய்வாளர்கள் நியமனம்!

மதுரை: ராச ராச சோழனுக்கு மணி மண்டபம் மற்றும் சிலை அமைக்க கோரிய வழக்கில் நீதிமன்றத்திற்கு உரிய தகவல் அளித்து உதவ தொல்லியல் நிபுணர்களை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நியமனம் செய்துள்ளது.

மதுரை உயர்நீதிமன்றக் கிளை
author img

By

Published : Apr 2, 2019, 10:46 PM IST

ராமநாதபுரத்தைச் சேர்ந்தவர் வழக்கறிஞர் திருமுருகன். இவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல மனு ஒன்றினைத் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் குறிபிட்டுள்ளதாவது, "சோழ சாம்ராஜ்ஜியத்தின் பேரரசன் முதலாம் ராச ராச சோழன் கிபி 985 முதல் கிபி 1014 வரையில் ஆட்சி புரிந்தார். இவரது இயற்பெயர் அருள்மொழிவர்மன். இவரது ஆட்சி காலத்தில் நுண்கலை, கட்டிடக்கலை, சமயம், இலக்கியம் என அனைத்து துறைகளும் சிறந்து விளங்கின. இதற்கான சான்றுகளாக தஞ்சை பெரிய கோயில், ஸ்ரீரங்கம் கோயில் உள்ளிட்டவை உள்ளன.

Rajaraja chozhan
இராச இராச சோழன்

இவருடைய ஆட்சியும், கட்டிடக்கலையும் இன்று அளவும் உலக அளவில் அனைவராலும் பாராட்டப்பட்டு புகழ்ந்து பேசபட்டு வருகிறது. ஆனால் இவருடைய சமாதி தற்போது தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே உடையாளூர் என்ற கிராமத்தில் கேட்பாரற்று பராமரிப்பு இன்றி சிதைந்து கிடக்கிறது. இந்த கிராமத்தை சுற்றி ஆரியப்படை, சோழப்படை, சோழமாளிகை, பட்டீஸ்வரம் போன்ற கிராமங்கள் உள்ளன. அதுமட்டுமல்லாமல் அரண்மனை மற்றும் மாளிகைகளும் உள்ளன. இதனை தொல்லியல் துறை முறையாக ஆய்வு செய்தால் சோழர்களின் வரலாற்று சான்றுகள் கிடைக்கும்.

மேலும், மிகப்பெரிய சாம்ராஜ்ஜியத்தை கட்டியமைத்த இராச இராச சோழனின் சமாதியின் இன்றைய நிலை மிகவும் மோசமாக உள்ளது. ஆனால் பிற மாநிலங்களில் அந்த மாநிலத்தில் புகழ்பெற்றவர்களுக்கு அவர்களின் புகழை பரப்ப சிலை அமைக்கப்பட்டுள்ளது

thanjai big temple
தஞ்சை பெரிய கோயில்

உதாரணமாக மகாராட்டிர மாநிலத்தில் சத்ரபதி சிவாஜி சிலையை அரபிக்கடலில் ரூ. 4900 கோடி செலவில் நிறுவியுள்ளது. அதேபோல் மாமன்னர் ராச ராச சோழனின் சிலையை இந்திய பெருங்கடல் அல்லது வங்காள விரிகுடா கடல் பகுதியில் நிறுவவும், அவரது சமாதி உள்ள இடத்தில் மணிமண்டபம் கட்டி அதனை அனைவரும் பார்த்து அறியும் விதமாக சுற்றுலா தளமாக அறிவிக்கவும் உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் சுந்தர் ஆகியோரது அமர்வு, ராச ராச சோழனுக்கு மணி மண்டபம் மற்றும் சிலை அமைப்பது தொடர்பாக நீதிமன்றத்திற்கு உரிய தகவல் தெரிவித்து உதவ தொல்லியல் நிபுணர்களான மதுரை சாந்தலிங்கம் மற்றும் குடவாயல் பாலசுப்பிரமணியம் ஆகிய இருவரும் திங்கட்கிழமை நீதிமன்றத்தில் ஆஜராகி ஆலோசனை கூற உத்தரவிட்டு, விசாரணையை ஒத்திவைத்தனர்.

இராச இராச சோழனுக்கு மணி மண்டபம் மற்றும் சிலை அமைக்க கோரிய வழக்கில் நீதிமன்றத்திற்கு உரிய தகவல் தெரிவித்து உதவ தொல்லியல் நிபுணர்கள் நியமனம்.

இராமநாதபுரத்தை சேர்ந்த வழக்கறிஞர் திருமுருகன் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அதில்," சோழ சாம்ராஜ்ஜியத்தின் பேரரசன் முதலாம் இராச இராச சோழன் கிபி 985 முதல் கிபி 1014 வரையில் ஆட்சி புரிந்தார். இவரது இயற்பெயர் அருள்மொழிவர்மன். இவரது ஆட்சி காலத்தில் நுண்கலை, கட்டிடக்கலை, சமயம், இலக்கியம் என அனைத்து துறைகளும் சிறந்து விளங்கின. இதற்கான சான்றுகளாக தஞ்சை பெரிய கோயில், ஸ்ரீரங்கம் கோயில் உள்ளிட்டவை உள்ளன.  இவருடைய ஆட்சியும், கட்டிடக்கலை இன்று அளவும் உலக அளவில் அனைவராலும் பாரட்டப்பட்டு புகழந்து பேசபட்டு வருகிறது. ஆனால் இவருடைய சமாதி தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உடையாளூர் என்ற கிராமத்தில் கேட்பாரற்று பராமரிப்பு இன்றி சிதைந்து கிடக்கிறது. இந்த கிராமத்தை சுற்றி ஆரியப்படை, சோழப்பட்டை, சோழமாளிகை, பட்டீஸ்வரம் போன்ற கிராமங்கள் உள்ளன. இங்கு இவரது ஆட்சிகாலத்தில் கட்டப்பட்ட அரண்மனை மற்றும் மாளிகைகள் உள்ளன. இங்கு முறையாக தொல்லியல் துறை ஆய்வு செய்தால் சோழர்களின் வரலாற்று சான்றுகள் கிடைக்கும்.
மிகப்பெரும் சாம்ராஜ்ஜியத்தை கட்டியமைத்த இராச இராச சோழனின் சமாதியின் இன்றைய நிலை மிகவும் மோசமாக உள்ளது. ஆனால் பிற மாநிலங்களில் அந்த மாநிலத்தில் புகழ்பெற்றவர்களுக்கு அவர்களின் புகழை பரப்ப சிலை அமைக்கப்பட்டுள்ளது 
உதாரணமாக மகாராட்டிர மாநிலத்தில் சத்ரபதி சிவாஜி சிலையை அரபிக்கடலில் 4900 கோடி செலவில் நிறுவியுள்ளது.
இதே போல் குஜராத் மாநில அரசு  சர்தார் வல்லபாய் படேலின் சிலையை 3ஆயிரம் கோடி செலவில் நிறுவியுள்ளது. இதேபோல்  மாமன்னர் இராச இராச சோழனின் சிலையை  இந்திய பெருங்கடல் அல்லது வங்காளவிரிகுடா கடல்பகுதியில் நிறுவவும், அவரது சமாதி உள்ள இடத்தில் மணிமண்டபம் கட்டி அதனை அனைவரும் பார்த்து அறியும் விதமாக சுற்றுலா தளமாக அறிவிக்கவும் உத்தரவிட வேண்டும்"  என கூறியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன்,சுந்தர் அடங்கிய அமர்வு,  இராச இராச சோழனுக்கு மணி மண்டபம் மற்றும் சிலை அமைப்பது தொடர்பாக நீதிமன்றத்திற்கு உரிய தகவல் தெரிவித்து உதவ தொல்லியல் நிபுணர்கள மதுரை சாந்தலிங்கம் மறும் குடவாயல் பாலசுப்பிரமணியம் வரும் திங்கள் கிழமை நீதிமன்றத்தில் ஆஜராகி ஆலோசனை கூற உத்தரவிட்டும் வழக்கு விசாரணை திங்கள் கிழமைக்கு ஒத்திவைத்தனர்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.