ETV Bharat / state

தேவர் குருபூஜை வழக்கு: முன்ஜாமீன் கேட்ட பேராசிரியர் - ஆதாரம் கேட்ட நீதிமன்றம்

தேவர் குருபூஜையில் வாகனம் மீது நடனமாடிய வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள பேராசிரியரின் கல்லூரி வருகை பதிவேடு விவரம் போன்றவற்றை தாக்கல் செய்யுமாறு சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

உயர்நீதிமன்ற மதுரை கிளை
உயர்நீதிமன்ற மதுரை கிளை
author img

By

Published : Nov 10, 2021, 11:03 PM IST

ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் கடந்த மாதம் 30ஆம் தேவர் குருபூஜை நடைபெற்றது. அப்போது திருவாடணை வட்டாட்சியரின் ஜீப், காவல் துறையினரின் வேன் மீது சிலர் ஏறி நின்று நடனமாடினர். இதுதொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவியது.

இதையடுத்து மண்டலமாணிக்கம் பகுதியைச் சேர்ந்த 13 பேர் மீது பொதுச் சொத்துக்குச் சேதம் விளைவித்தது, அரசு ஊழியர்கள் ஆபாசமான வார்த்தைகளில் பேசி பணி செய்யவிடாமல் தடுத்தது உட்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர், மூன்று பேரை கைது செய்தனர்.

இந்த வழக்கில் காவல் துறையினர் தேடிவரும் பொறியியல் கல்லூரி உதவி பேராசிரியர் பி.செந்தில் குமார், முன்ஜாமீன் கேட்டு உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு நீதிபதி கே.முரளிசங்கர் முன்பு இன்று (நவ.10) விசாரணைக்கு வந்தது. அதில், மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் "தேவர் குருபூஜை நடைபெற்ற போது மனுதாரர் மண்டலமாணிக்கத்தில் இல்லை. அரசு வாகனங்களில் ஏறி நடனமாடியவர்களும், மனுதாரரும் ஒரே ஊரைச் சேர்ந்தவர் என்பதால் மனுதாரரைக் காவல் துறையினர் வழக்கில் சேர்த்துள்ளனர். இதனால் முன்ஜாமீன் வழங்க வேண்டும். அதுவரை மனுதாரரைக் கைது செய்யக்கூடாது" என வாதிட்டார்.

மனுதாரரின் கல்லூரி வருகை பதிவேடு மற்றும் சம்பவத்தின் வீடியோ, புகைப்படங்களைத் தாக்கல் செய்ய நீதிபதி உத்தரவிட்டு, அடுத்த விசாரணையை நாளைக்கு (நவ. 11) ஒத்திவைத்துள்ளார்.

இதையும் படிங்க: மண் கடத்தல் வழக்கு - திண்டுக்கல் மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.