ETV Bharat / state

அதிகாரிகள் விருப்பம் போல் செயல்பட மனநலம் பாதித்தவர்கள் என்ன கால்நடைகளா? - நீதிபதி சரமாரி கேள்வி

author img

By

Published : Jun 27, 2023, 10:39 PM IST

ராமநாதபுரம் தனியார் மனநல காப்பகத்தில் இருந்து 40 நபர்களை ராமநாதபுரம் அரசு காப்பகத்திற்கு மாற்ற தடை விதிக்க கோரிய வழக்கில், மன நோயாளிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு தனியார் மனநல காப்பகத்துக்கு மாற்ற உயர் நீதிமன்ற மதுரை கிளை தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

காப்பகம் மாற்றத்திற்கு தடை விதித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை

மதுரை: ராமநாதபுரம் ஹியூமானிட்டேரியன் அறக்கட்டளை சார்பில் நாகேஸ்வரன் உயர் நீதிமன்ற கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில், "நாங்கள் 15 ஆண்டுகளாக அரசின் அனுமதியுடன் மனநல காப்பகம் நடத்தி வருகிறோம். எங்கள் காப்பகத்தில் 50-க்கும் மேற்பட்ட மனநலம் குன்றியவர்கள் தங்கியுள்ளனர். காப்பகத்துக்கு அரசு வழங்க வேண்டிய நிதி வராததால் உயர் நீதிமன்ற கிளையில் வழக்கு தொடர்ந்தோம். அந்த வழக்கில் நிதி கோரிக்கை மீது 12 வாரத்தில் முடிவெடுக்க நீதிபதி உத்தரவிட்டார்.

இதையடுத்து எங்கள் காப்பகத்தில் ஆய்வு நடத்தி காப்பகத்தில் இருக்கும் 51 பேரில் 40 சரியாகிவிட்டதாகவும், அவர்களை அரசு காப்பகத்தில் சேர்க்க வேண்டும் என அதிகாரிகள் உத்தரவிட்டனர். எங்கள் காப்பகத்திலிருந்து 40 பேரை அரசு காப்பகத்துக்கு மாற்ற தடை விதிக்க வேண்டும்" எனக் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அடங்கிய அமர்வில் இன்று (ஜூன் 27) விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் ஆஜராகி, "காப்பகத்தில் இருப்பவர்கள் இன்னும் முழுவதுமாக சரியாகவில்லை. அவர்களை வேறு காப்பகத்துக்கு மாற்றுவதால் பிரச்சினைகள் ஏற்படும், அதனால் அவர்களை மாற்ற தடை விதிக்க வேண்டும்" என வாதிட்டார்.

வழக்கை விசாரித்த நீதிபதி, "சம்பந்தப்பட்ட மாற்றுத்திறனாளிகளின் புகைப்படங்களை பார்க்கும் போது, அவர்கள் வேறு காப்பகத்துக்கு செல்ல தகுதியானவர்கள் என எந்த பரிசோதனை அடிப்படையில் முடிவுக்கு வந்தார்கள் என்பது ஆச்சர்யமாக உள்ளது. எந்த மாதிரியான தகுதி தேர்வு நடத்தப்பட்டது. எதன் அடிப்படையில் தகுதியானவர்கள் பட்டியல் தயாரிக்கப்பட்டது என்பது தெரியவில்லை. எனவே மருத்துவக்குழு அறிக்கையை ஏற்க முடியாது. மனுதாரர் அரசிடம் நிதி கேட்டுள்ளார். அதற்காக வழக்கு தொடர்ந்துள்ளார். நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

இதனால் காப்பகத்தில் இருப்பவர்கள் வேறு காப்பகத்துக்கு மாற்ற முடிவு செய்துள்ளனர். காப்பகங்களுக்கான நிதி அங்கு தங்கியிருப்பவர்களின் எண்ணிக்கை அடிப்படையில் வழங்கப்படுவதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மனுதாரர் காப்பகத்தில் இருப்பவர்களை உறவினர்களுடன் அனுப்பவில்லை. அரசு காப்பகத்துக்கு மாற்றுகின்றனர். மனநலம் குன்றியவர்கள் தற்போதைய சூழலை நன்றாக பழகியிருப்பார்கள். அதிகாரிகள் தங்கள் விருப்பு, வெறுப்புக்கு ஏற்ப மனநலம் குன்றியவர்களை வேறு காப்பகத்துக்கு மாற்ற அவர்கள் ஒன்றும் கால்நடைகள் அல்ல.

சிலர் பத்தாண்டுக்கு மேலாக ஒரே காப்பகத்தில் உள்ளனர். இவர்களால் அந்த சூழ்நிலையை விட்டு வெளியேற முடியாது. அவர்களை வேறு இடத்துக்கு மாற்றுவதால் பிரச்சினை ஏற்படும். அதிகாரிகளின் அணுகுமுறையை ஏற்க முடியாது. மனுதாரர் காப்பகத்தில் இருந்து 40 மனநலம் குன்றியவர்களை அரசு காப்பகத்துக்கு மாற்றுவதற்கு தடை விதிக்கப்படுகிறது” என உத்தரவை பிறப்பித்து வழக்கை முடித்து வைத்தார்.

இதையும் படிங்க: சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: உயர்நீதிமன்றக் கிளை முக்கிய உத்தரவு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.