ETV Bharat / state

Palani kumbabishekam; தமிழில் மந்திரம் ஓத அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளோம் - மாநில அரசு - Palani kumbabishekam online booking

Palani kumbabishekam: பழனி குடமுழுக்கு விழாவில் தமிழில் மந்திரம் ஓதுவதற்கு உத்தரவிடக்கோரிய வழக்கு விசாரணையில், 'முருகன் தமிழ்க் கடவுள் ஆவார். எனவே, பழனி குடமுழுக்கு விழாவில் தமிழில் மந்திரம் ஓதுவதற்கு எந்தவொரு தனிநபரும் அரசாங்கத்திற்கு இந்த விவகாரத்தில் கருத்துக்கூற வேண்டியது இல்லை' என்று தமிழ்நாடு அரசு பதிலளித்துள்ளது.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Jan 19, 2023, 6:49 PM IST

Palani kumbabishekam: மதுரை: பழனி குடமுழுக்கு விழாவில் (Palani Murugan Temple kumbabishekam Festival) தமிழில் மந்திரம் ஓதுவதற்கு உத்தரவிடக் கோரிய வழக்கு விசாரணையில், பழனி முருகன் கோயிலில் குடமுழுக்கு விழாவில் தமிழில் மந்திரம் ஓதப்படுகிறதா? என்பது குறித்து நிலை அறிக்கையை தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

அதே நேரத்தில், பழனி முருகன் கோயிலின் குடமுழுக்கு விழாவில் தமிழில் மந்திரம் ஓதுவதற்கான அனைத்து நடவடிக்கையும் எடுத்துள்ளோம் என தமிழ்நாடு அரசு பதிலளித்துள்ளது.

கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த தமிழ் ராஜேந்திரன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் பொது நல மனு தாக்கல் செய்திருந்தார். அதில், "பழனி முருகன் கோயில் என்பது மிகவும் பிரசித்திபெற்ற கோயிலாகும். பழனி முருகன் கோயிலுக்கான குடமுழுக்கு விழா வரும் ஜனவரி 27ஆம் தேதி, 2023 நடைபெற உள்ளது.

தமிழ்க் கடவுள் முருகன் எனப் போற்றப்படும் பழனி முருகன் கோயில் குடமுழுக்கை, தமிழில் மந்திரம் ஓதி நடத்துவதை சிறப்பானதாகும். தமிழில் ஏராளமான மந்திரங்கள் உள்ளன. கடந்த சில ஆண்டுகளாகவே குடமுழுக்கின்போது மந்திரங்கள் சமஸ்கிருதத்தில் ஓதப்பட்டு வருகிறது. மேலும் கடந்த 2020ஆம் ஆண்டு உயர் நீதிமன்ற மதுரைக்கிளை தமிழ் நாட்டிலுள்ள அனைத்து கோயில் குடமுழுக்குகளிலும் தமிழில் மந்திரம் ஓத வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்த உத்தரவானது பழனி முருகன் கோயிலுக்கும் பொருந்தும். மேலும் தஞ்சை பெரிய கோயிலிலும் தமிழில் மந்திரம் கூறி குடமுழுக்கு நடத்துவதற்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. எனவே, அதன் அடிப்படையில் பழனி முருகன் கோயிலில் குடமுழுக்கின்போது தமிழில் மந்திரம் ஓதுவதற்கு உத்தரவிட வேண்டும்" என அந்த மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் கிருஷ்ணகுமார், விஜயகுமார் அமர்வு முன்பு இன்று (ஜன.19) விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில், 'முருகன், தமிழ்க் கடவுள் ஆவார். எனவே, தமிழில் மந்திரம் ஓதுவதற்கு எந்த தனிநபரும் அரசாங்கத்திற்கு கருத்துக்கூற வேண்டியது இல்லை. தமிழ்நாடு அரசு பழனி முருகன் கோயிலின் குடமுழுக்கு விழாவில் தமிழில் மந்திரம் ஓதுவதற்கான அனைத்து நடவடிக்கையினையும் எடுத்துள்ளது' எனத் தெரிவிக்கப்பட்டது.

இதனைப் பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், பழனி முருகன் கோயிலில் குடமுழுக்கு விழாவில் தமிழில் மந்திரம் ஓதப்படுகிறதா என்பது குறித்து நிலை அறிக்கையைத் தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையினை ஒத்திவைத்தனர்.

இதையும் படிங்க: குடிநீரில் மலம் கலந்தது; 21ம் நூற்றாண்டில் அநாகரிகத்தின் உச்சம் - திருமாவளவன்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.