உயர் நீதிமன்ற மதுரைக் கிளை பதிவாளர் தாமாக முன்வந்து மனு ஒன்றினை தாக்கல் செய்தார். அதில், “கரூர் மாவட்டத்தில் சாய பட்டறைகளில் இருந்து கழிவுநீர் வெளியேற்றப்படுகிறது.
இந்தக் கழிவுநீர் அமராவதி ஆற்றில் கலக்கப்படுகிறது. இதனால் அமராவதி ஆறு மாசடைகிறது. அமராவதி ஆறு சுமார் 282 கிலோமீட்டர் தூரம் திருப்பூர், கரூர் வழியாக செல்கிறது.
மேலும் கரூர், திருப்பூர் ஆகிய ஊர்களில் உள்ள நிறுவனங்கள் தங்களது நிறுவன கழிவுகளை ஆற்றுக்குள் வீசுகின்றனர்.
இதை அரசு அலுவலர்கள் கண்டு கொள்வதில்லை, இதனால் அப்பகுதியில் உள்ள விவசாயிகள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.
எனவே சாய கழிவு நீரை அமராவதி ஆற்றில் கலக்காமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்க அலுவலர்களுக்கு உத்தரவிட வேண்டும்” எனக் குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, கோதாவரியில் கழிவு நீர் கலந்ததால் 500 பேர் பாதிக்கப்பட்டனர்.
அங்கு குடிநீரில் நிக்கல், தாமிரம் கலந்தது. அமராவதி ஆறும் இது போன்று மாசு அடைய வேண்டுமா? என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.
இதையும் படிங்க...டிக்டாக் காணொலிகளில் மோசடி: 5 பேர் மீது வழக்குப்பதிவு!