ETV Bharat / state

கூடுதல் நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்க நடவடிக்கை - தமிழ்நாடு அரசு பதில் மனு - கூடுதல் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்க நடவடிக்கை

மதுரை: நேரடி நெல் கொள்முதல் நிலையங்களைக் கூடுதலாகத் திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுவருவதாக தமிழ்நாடு அரசு உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தெரிவித்துள்ளது.

உயர்நீதிமன்ற மதுரை கிளை
உயர்நீதிமன்ற மதுரை கிளை
author img

By

Published : Oct 28, 2020, 10:48 PM IST

தமிழ்நாட்டில் கூடுதலாக நேரடி கொள்முதல் மையங்களைத் திறக்க உத்தரவிடக் கோரி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் சென்னையைச் சேர்ந்த சூரிய பிரகாசம் என்பவர் ஒரு பொது மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது இது குறித்து பதில் மனு தாக்கல்செய்ய அரசுக்கு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.

இதனை அடுத்து இந்த வழக்குத் தொடர்பாக தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் மேலாண் இயக்குநர் சுதாதேவி பதில் மனு தாக்கல்செய்துள்ளார்.

அதில், "தமிழ்நாட்டில் தற்போது 862 நேரடி கொள்முதல் மையங்கள் தொடங்கப்பட்டுள்ளன. கரோனா ஊரடங்கு காலகட்டத்தில் 12.25 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டது. 2.42 லட்சம் விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்யப்பட்டது.

இதற்காக இரண்டாயிரத்து 416 கோடி ரூபாய் விவசாயிகள் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது. தற்போது குறுவை சாகுபடியில் 2019- 2020ஆம் ஆண்டில் இரண்டாயிரத்து 135 நேரடி கொள்முதல் மையங்கள் திறக்கப்பட்டன. அதில் 32 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு ஆறாயிரத்து 130 கோடி ரூபாய் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது.

இதற்கு முன்னதாகப் பெறப்பட்ட நெல் கொள்முதல் அளவைக் காட்டிலும் இது அதிகபட்சமான நெல் கொள்முதல் ஆகும். நேரடி கொள்முதல் மையங்கள் சனி, ஞாயிறுகளில்கூட செயல்படுகிறது.

மேலும் தற்போது புதிதாக தானியங்கி மூலம் வழங்கக்கூடிய டோக்கன் முறையை விவசாயிகளிடம் வழங்குகிறோம். அதன்படி அவர்கள் குறிப்பிட்ட நாளில் வந்து குறிப்பிட்ட நேரத்தில் நெல் மூட்டைகளை கொள்முதல் மையங்களில் வழங்கலாம்.

அதேபோன்று மழை, வெயில் காலத்தைக் கருத்தில்கொண்டு 17 விழுக்காடு அளவு உள்ள ஈரப்பதம் கொண்ட நெல்லை வாங்குவதற்கும் அனைத்து நெல் கொள்முதல் மையங்களுக்கும் உத்தரவிட்டுள்ளோம்.

ஒவ்வொரு மூடைக்கும் முப்பது, நாற்பது ரூபாய் ஊழியர்கள் லஞ்சம் கேட்கிறார்கள் என்று கூறுவது தவறான தகவல். அதே நேரத்தில் குறுவை சாகுபடி நெல் கொள்முதலுக்காக செப்டம்பர் 30ஆம் தேதி வரை ஆறு சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டு, ஆயிரத்து 725 ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு முறைகேட்டில் ஈடுபட்ட 105 அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது" என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.