திருநெல்வேலியைச் சேர்ந்த அரிமுத்துக்குமார், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்று தாக்கல்செய்திருந்தார்.
அவர் தாக்கல்செய்த மனுவில், "நான் கிராம நிர்வாக அலுவலராகத் தேர்வுசெய்யப்பட்டு 2015ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் திருச்சி மாவட்டத்தில் நியமிக்கப்பட்டேன்.
அங்கு 5 ஆண்டுகள் வரை பணியாற்றினேன். ஆகஸ்ட் 2020இல் திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை அருகேயுள்ள கொங்கந்தான் பாறைக்கு மாற்றப்பட்டேன்.
ஆகஸ்ட் 17ஆம் தேதி இங்கு பணியில் சேர்ந்தேன். 2 நாள்கள் பணியாற்றிய நிலையில், ஆகஸ்ட் 19ஆம் தேதி எந்தக் காரணமும் இன்றி என்னை காத்திருப்போர் பட்டியலில் வைத்துள்ளனர்.
எனவே, உரிய காரணம் இன்றி என்னை காத்திருப்போர் பட்டியலில் வைத்து பிறப்பித்த உத்தரவை ரத்துசெய்து, மீண்டும் பணியில் தொடர அனுமதிக்குமாறு உத்தரவிட வேண்டும்" எனக் கூறியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஆர். சுரேஷ்குமார், "மனுதாரர் பணியில் சேர்ந்த 48 மணி நேரத்தில் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றியது ஏற்கும்படி இல்லை. எனவே, அந்த உத்தரவுக்குத் தடைவிதிக்கப்படுகிறது. காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றியதற்கான காரணத்தை மாவட்ட ஆட்சியர் தெரிவிக்க வேண்டும்.
மறு உத்தரவு வரும்வரை அந்த இடத்தில் பணியில் தொடரலாம்" என உத்தரவு பிறப்பித்தார். மேலும், மனு குறித்து தமிழ்நாடு அரசு சார்பில் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை நான்கு வாரத்திற்கு ஒத்திவைத்தார்.
காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றியதற்கான காரணத்தை தெரிவிக்க ஆட்சியருக்கு உத்தரவு - கிராம நிர்வாக அலுவலர்
மதுரை: உரிய காரணம் இல்லாமல் கிராம நிர்வாக அலுவலரைக் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றிய மாவட்ட ஆட்சியரின் உத்தரவுக்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தடைவிதித்துள்ளது.