ETV Bharat / state

EWS 10% ஒதுக்கீடு: முரணாகும் ஆண்டு வருமானம் ரூ.8 லட்சம்? சட்டத்துறை பதிலளிக்க ஆணை

EWS 10% இடஒதுக்கீடு பெற ரூ.7,99,999 லட்சத்திற்குள் இருக்கவேண்டும் என்ற விதிமுறையானது, ஆண்டு வருமானம் ரூ.2,50,000-க்கு மேல் உள்ள அனைவரும் வருமான வரி கட்டவேண்டும் என்பதற்கு முரணாக உள்ளதாக தொடுக்கப்பட்ட மனுவிற்கு மத்திய நிதி மற்றும் சட்டத்துறை பதிலளிக்க உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Nov 21, 2022, 10:49 PM IST

மதுரை: விருதுநகர் மாவட்டம், குன்னூர் பகுதியைச் சேர்ந்த ஸ்ரீனிவாசன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் ஒரு மனுதாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், ’அரசியலமைப்பின் அடிப்படை கட்டமைப்பை இந்திய பாராளுமன்றத்தால் திருத்த முடியாது. இத்தகைய சூழ்நிலைகளில், இந்திய பாராளுமன்றம் அரசியலமைப்பு (103 வது திருத்தம்) சட்டம், 2019-ஐ இயற்றியது. இந்தத் திருத்தத்தின் மூலம், இந்திய நாடாளுமன்றம், தற்போதுள்ள இடஒதுக்கீட்டிற்கு மேலதிகமாக, பொருளாதாரத்தில் பின்தங்கிய குடிமக்களுக்கு கல்வி நிறுவனங்களில் சேர்க்கை மற்றும் அரசு பதவிகளில் பணிநியமனம் பெற இடஒதுக்கீடு செய்ய மாநில அரசுக்கு அதிகாரம் அளித்தது.

எனவே, உயர்சாதியிலுள்ள பொருளாதாரத்தில் பின்தங்கிய குடிமக்களுக்கு 10% வரம்பு வரையிலான சேர்க்கை மற்றும் நியமனங்களில் 10% இடஒதுக்கீடு ஒதுக்கீடு செய்ய அரசுக்கு அதிகாரம் உள்ளது. இச்சட்டம் சமூகத்தில் உயர் வகுப்பினர் பயன்பெறும் வகையில் அமைந்தது.

07.11.2022 தேதியிட்ட தீர்ப்பின் மூலம், அரசியலமைப்பில் உள்ள 103 திருத்தம் செல்லுபடியாகும் என உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது. இதன்படி, கல்வி நிறுவனங்களின் சேர்க்கை மற்றும் அரசு நியமனங்களில் தற்போதுள்ள இடஒதுக்கீட்டிற்குக் கூடுதலாக 10% இடஒதுக்கீட்டை பொருளாதாரத்தில் பின்தங்கிய குடிமக்களுக்கு வழங்குவதற்கு எந்த தடையும் இல்லை.

உயர் சாதியிலுள்ள பொருளாதாரத்தில் பின் தங்கிய வகுப்பினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீட்டைப் பெற ரூ.7,99,999 வரம்புக்கு ஆண்டு வருமானம் இருக்கவேண்டும் என வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால், ஆண்டு வருமானம் வருடத்திற்கு ரூ.2,50,000-க்கு மேல் இருந்தால் அனைவரும் வருமான வரி கட்ட வேண்டும் என உள்ளது. இது முரணாக உள்ளது.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 265ஆவது பிரிவின்படி, சட்டத்தின் அதிகாரம் இல்லாமல் வரி விதிக்கவோ (அ) வசூலிக்கவோ அரசுக்கு எந்த அதிகாரமும் இல்லை. 10 சதவீத இட ஒதுக்கீட்டிற்கு ஆண்டு வருமானம் ரூ.7,99,999 லட்சத்திற்குள் இருக்கவேண்டும் என்ற விதிமுறையும், ஆண்டு வருமானம் 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் உள்ள அனைவரும் வருமான வரி கட்ட வேண்டும் என்ற விதிமுறையும் முரணாக உள்ளது. இது பொருளாதார சமமின்மையை ஏற்படுத்தும்.

எனவே, ஆண்டு வருமானம் 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் உள்ள அனைவரும், வருமான வரி கட்ட வேண்டும் என்ற விதிமுறையை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் (அ) வருமான வரி உச்ச வரம்பை ஆண்டிற்கு ரூ.8 லட்சமாக உயர்த்த வேண்டும்' எனக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த மனு நீதிபதிகள் மகாதேவன், சத்தியநாராயண பிரசாத் அமர்வில் இன்று (நவ.21) விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் கோரிக்கை குறித்து மத்திய நிதி மற்றும் சட்டத்துறை செயலாளர்கள் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை 4 வாரம் ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

இதையும் படிங்க: பள்ளிகளில் மொபைல் மனநல ஆலோசனை மையம் செயல்படாதது ஏன்? - நீதிபதிகள்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.