ETV Bharat / state

அமராவதி ஆறு மாசு குறித்து ஆய்வுசெய்து தாக்கல்செய்ய உத்தரவு! - அமராவதி ஆறு மாசு குறித்து ஆய்வு செய்து தாக்கல் செய்ய உத்தரவு!

மதுரை: அமராவதி ஆற்றுப் பகுதியில் உள்ள இரட்டை வாய்க்கால் பகுதியில் ஐந்து பல்வேறு இடங்களில் நீரின் மாதிரிகள் எடுத்து மாசு கட்டுப்பாட்டு வாரியம், சென்னை கிங்ஸ் ஆய்வு கூடத்திற்கு அனுப்பி அறிக்கை தாக்கல்செய்ய மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

அமராவதி ஆறு மாசு குறித்து ஆய்வு செய்து தாக்கல் செய்ய உத்தரவு!

author img

By

Published : Dec 10, 2020, 8:29 AM IST

உயர் நீதிமன்ற மதுரைக் கிளை பதிவாளர் தாமாக முன்வந்து தாக்கல்செய்த மனுவில், “கரூர் மாவட்டத்தில் சாயப் பட்டறைகளிலிருந்து கழிவுநீர் வெளியேற்றப்படுகிறது. இந்தக் கழிவுநீர் அமராவதி ஆற்றில் கலக்கப்படுகிறது. இதனால் அமராவதி ஆறு மாசடைகிறது. அமராவதி ஆறு சுமார் 282 கிலோமீட்டர் தூரம் திருப்பூர், கரூர் வழியாகச் செல்கிறது.

மேலும் கரூர், திருப்பூர் ஆகிய ஊர்களிலுள்ள நிறுவனங்கள் தங்களது நிறுவனக் கழிவுகளை ஆற்றுக்குள் வீசுகின்றனர். இதை அரசு அலுவலர்கள் கண்டுகொள்வதில்லை. இதனால் அப்பகுதியிலுள்ள விவசாயிகள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். எனவே சாயக்கழிவு நீரை அமராவதி ஆற்றில் கலக்காமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்க அலுவலர்களுக்கு உத்தரவிட வேண்டும்” என மனுவில் கோரப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆறுகளை மாசுப்படுத்துவோர்களை குண்டர் சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்ய அரசிடம் உரிய விளக்கம் பெற்று சமர்ப்பிக்கப்படும் என்று அரசு வழக்கறிஞர் தெரிவித்தார்.

அப்போது நீதிபதிகள் அமராவதி ஆற்றுப் பகுதியில் உள்ள இரட்டை வாய்க்கால் பகுதியில் ஐந்து பல்வேறு இடங்களில் நீரின் மாதிரிகள் எடுத்து மாசு கட்டுப்பாட்டு வாரியம், சென்னை கிங்ஸ் ஆய்வு கூடத்திற்கு அனுப்பி அறிக்கை தாக்கல்செய்ய மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு உத்தரவிட்டு வழக்கை டிசம்பர் 17ஆம் தேதி ஒத்திவைத்தனர்.

இதையும் படிங்க...'ஆற்றை மாசுப்படுத்தும் நபர்களை தண்டிக்க அரசு என்ன செய்துள்ளது'- நீதிமன்றம் கேள்வி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.