ETV Bharat / state

வழக்கறிஞர் மீது போடப்பட்ட FIR-ஐ ரத்து செய்து உத்தரவிட்ட உயர்நீதிமன்றம்! - உயர் நீதிமன்ற மதுரை கிளை

இராமநாதபுரம் தொண்டி மாவட்டத்தைச் சார்ந்த வழக்கறிஞர் கலந்தர் ஆசிக் மதுரை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், வழக்கறிஞர் மீது போடப்பட்ட முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்வதாகக் கூறி வழக்கை முடித்து வைத்தது.

வழக்கறிஞர் மீது போடப்பட்ட FIR-ஐ ரத்து செய்து உத்தரவிட்ட உயர்நீதிமன்றம்

author img

By

Published : Aug 9, 2023, 4:14 PM IST

மதுரை: 'தன்னை தாக்கி தன் மீது பொய்யான கொலை வழக்கு பதிவு செய்த விவகாரத்தில் தன் மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிடக் கோரி' வழக்கறிஞர் தாக்கல் செய்திருந்த மனு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், அந்த மனுவை ரத்து செய்து உத்தரவிட்டார் நீதிபதி.

இராமநாதபுரம் மாவட்டம் தொண்டியை சேர்ந்த வழக்கறிஞர் கலந்தர் ஆசிக் அகமது. இவர் மனிதநேய மக்கள் கட்சியில் வழக்கறிஞர் அணிச் செயலாளராக உள்ளார். இவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், "கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா காலகட்டத்தில் தொண்டியில் ராஜலட்சுமி என்பவர் மருத்துவமனை வைத்து நடத்தி வந்துள்ளார். அப்போது அழகம்மாள் என்ற மூதாட்டி அவரிடம் சிகிச்சைக்கு வந்துள்ளார். சிகிச்சை பலனில்லாமல் மூதாட்டி இறந்துள்ளார். இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்த தொண்டி போலீசார், ராஜலட்சுமி போலி மருத்துவர் என உறுதிபடுத்தி, அவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

இந்த வழக்கில் திருவாடனை காவல்துறை துணை கண்காணிப்பாளர் (DSP) புகழேந்தி கணேஷ், என் மீது முன்விரோதம் இருந்து வந்ததால், இந்த வழக்கில் போலி மருத்துவர் ராஜலட்சுமிக்கு பண உதவி செய்ததாக என்னை வழக்கில் குற்றவாளியாக சேர்த்து உள்ளார். மேலும் போலி மருத்துவர் ராஜலட்சுமியை துன்புறுத்தி வழக்கறிஞர் கலந்தார் ஆஷிக் அகமது, தன் மீது பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகவும் ஜாதி பெயரை சொல்லித் திட்டியதாக புகார் பெற்று என்னை வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்திருந்தார். இந்த வழக்கில் கைது செய்து சிறையிலும் அடைத்தனர்.

போலி மருத்துவர் கைது செய்யப்பட்ட விவகாரத்தில் எனக்கு சிறிதும் தொடர்பில்லை. ஆனால் திருவாடானை காவல்துறை துணை கண்காணிப்பாளருக்கும் எனக்கும் இருந்த முன்விரோதத்தை மனதில் வைத்து, இந்த வழக்கில் DSP புகழேந்தி கணேஷ் உத்தரவின் பேரில் தொண்டி போலீசார் என்னை வழக்கில் சேர்த்து உள்ளனர். எனவே இந்த வழக்கில் என் மீது போடப்பட்ட முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்ய வேண்டும். மேலும் சம்பந்தப்பட்ட திருவாடனை டி.எஸ்.பி. புகழேந்திகணேஷ் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்" என மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கை ஏற்கனவே விசாரணை செய்த உயர் நீதிமன்ற மதுரை கிளை, வழக்கறிஞர் மீது போடப்பட்ட வழக்கில் விசாரணைக்கு இடைக்கால தடை விதித்திருந்தது. இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட காவல்துறை தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய, ஏற்கனவே உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கு மீண்டும் நீதிபதி தனபால் முன் இன்று விசாரணைக்கு வந்தது. இரு தரப்பு வாதங்களையும் பதிவு செய்த நீதிபதி வழங்கி உள்ள தீர்ப்பில்,

"போலி மருத்துவரின் மருத்துவமனைக்கு நிதி உதவி செய்ததாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் அதற்கான எந்த ஆதாரங்களையும் காவல்துறை தரப்பில் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவும் இல்லை நிரூபிக்கபடவும் இல்லை. மேலும் வழக்கறிஞருக்கு எதிராக முதல் தகவல் அறிக்கையிலும் வலுவான குற்றச்சாட்டு ஏதும் இல்லை, எனவே வழக்கறிஞர் மீது போடப்பட்ட முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்வதாக" நீதிபதி உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.

இதையும் படிங்க: சிதம்பரம் தீட்சிதர்கள் தொடர்பாக அவதூறு பரப்பிய வழக்கு - எஸ்.ஜி.சூர்யா நேரில் ஆஜர்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.