மதுரை: பாஜக மூத்தத்தலைவர் ஹெச்.ராஜா உயர் நீதிமன்றம் மதுரைக்கிளையில் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார். அதில், "கடந்த 2018ஆம் ஆண்டு செப்டம்பர் 17ஆம் தேதி வேடசந்தூரில் இந்து முன்னணி சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இந்த பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசியபோது, இந்து சமய அறநிலையத்துறை அலுவலர்கள் கோயில் நிலங்களை லஞ்சம் வாங்கிக்கொண்டு விற்பனை செய்கின்றனர் என்றும்; பெண்களின் மரியாதையை குறைக்கும் வகையிலும் கொச்சைப்படுத்தும் வகையிலும் பேசியதாகக்கூறி என் மீது புகார் அளிக்கப்பட்டது.
அதனடிப்படையில் விருதுநகர் பஜார் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணை ஸ்ரீவில்லிபுத்தூர் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. நான் எந்த ஒரு தனிநபரையும் குறிப்பிட்டு அவ்வாறு பேசவில்லை.
அரசியல் உள்நோக்கத்தோடு என் மீது இந்த வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆகவே, ஸ்ரீவில்லிபுத்தூர் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் இந்த வழக்கை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்" எனக் குறிப்பிட்டுள்ளார். இந்த வழக்கு கூடிய விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.
இதையும் படிங்க: கோட்சே குறித்த பதிவு..! கைதான எம்.எல்.ஏ.