மதுரை ரயில் சந்திப்பு வழியாக நாள்தோறும் 60-க்கும் மேற்பட்ட ரயில்கள் கடந்து செல்கின்றன. அதில் வட மாநிலங்களில் இருந்து வரக்கூடிய ரயில்களில் குட்கா பொருள்கள் கடத்தி வரப்படுவதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து, ரயில் நிலையத்தில் சோதனை தீவிரபடுத்தப்பட்டது.
மைசூரில் இருந்து தூத்துக்குடி செல்லக்கூடிய சிறப்பு விரைவு ரயில், இரண்டாவது நடைமேடைக்கு வந்தபோது சந்தேகத்துக்குரிய வகையில் ஏழு மூட்டைகள் இருப்பதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. அம்மூட்டைகளை சோதனை செய்தபோது தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட சுமார் 48 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 400 குட்கா பொட்டலங்கள் இருப்பது தெரியவந்தது.
அதனைத் தொடர்ந்து குட்கா மூட்டைகளை பறிமுதல் செய்த ரயில்வே பாதுகாப்பு படை காவல் துறையினர் குட்காவை கொண்டு வந்த கருப்பசாமி மற்றும் பசும்பொன் ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: வாளையாறு பகுதியில் யானைகள் செல்ல சுரங்கப்பாதை..