ETV Bharat / state

'நந்தா' பட பாணியில் வெங்காயம் திருடி, பணம் வாங்கிச் சென்ற நபர் கைது!

மதுரை: நூதன முறையில் வெங்காயத்தைத் திருடி விட்டு, திரைப்பட பாணியில் செலவுக்கும் கடையில் இருந்த பணியாளரிடம் ஆயிரத்து 500 ரூபாய் வாங்கிச் சென்ற திருடன் கையும் களவுமாக பிடிபட்ட சம்பவம் சிரிப்பலையை ஏற்படுத்தியுள்ளது.

onion theft
onion theft
author img

By

Published : Dec 8, 2019, 7:40 PM IST

மதுரை கோமதிபுரத்தில் உள்ள ஒரு பெரிய மளிகைக் கடையில் 50 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் கையில் கட்டைப் பையுடன் நுழைந்து செல்போன் பேசிக் கொண்டே, விலை ஏறிக் கொண்டே போகும் வெங்காயத்தைத் திருடியுள்ளார்.

பின்பு சுற்றும் முற்றும் யாரும் தன்னை பார்க்கீறார்களா? என நோட்டமிடும் அந்த நபர் கடையில் இருக்கும் நொறுக்குத் தீனி பாக்கெட்டுகளையும் தனது பையில் போட்டுக்கொள்கிறார். இதனையடுத்து கடையில் இருந்த பணியாட்களிடம் உங்களது முதலாளியிடம் ' அரிசி வாங்கப் பணம் கொடுத்துள்ளேன். இப்ப அரிசி வேண்டாம். நான் தந்த ஆயிரத்து 500 ரூபாய் பணத்தைத் திருப்பிக்கொடுங்கள்' என்று பெற்றுக்கொண்டு தப்பியோடியுள்ளார்.

சிறிது நேரம் கழித்து கடைக்கு வந்த முதலாளியிடம் ஆயிரத்து 500 ரூபாய் கொடுத்தது குறித்து பணியாட்கள், கூற முதலாளி அதிர்ச்சியடைந்துள்ளார். யார் அவர் என்ற சந்தேகத்தின் பேரில் கடையில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளைப் பார்த்த போது, மஞ்சள் சட்டை அணிந்த நபர் வெங்காயம் முதல் நொறுக்குத் தீனி வரை திருடும் காட்சிகள் பதிவாகியிருந்தன.

இதனைத்தொடர்ந்து 'நந்தா’ திரைப்பட பாணியில் ஆயிரத்து 500 ரூபாயையும் வாங்கிச் சென்றுள்ளார். மேலும் இந்த திருட்டு ஆசாமி கடைக்கு மீண்டும் வந்தால் கையும் களவுமாக பிடிக்க அவர்கள் எண்ணினர்.

மீண்டும் மாலை 6.00 மணியளவில் கடைக்கு வந்த அந்த திருட்டு நபரை பிடித்து விசாரணை செய்ததில், மதுரை கோமதிபுரம் கொன்றை வீதியைச் சேர்ந்த வருசை முகமது மகன் அப்துல் ரகுமான் என்பது தெரிய வந்தது.

மளிகைக் கடையில் திருடும் நபர்

மேலும், மளிகைக் கடையில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்த போது, அவர் கடந்த ஒரு மாத காலமாக பிஸ்கட் முதல் பாசுமதி அரிசி பாக்கெட் வரை, மதியச் சாப்பாட்டு நேரத்தில் வந்து கட்டைப் பையில் திருடி செல்லும் காட்சிகள் பதிவாகியுள்ளன. இதனைத்தொடர்ந்து கடையில் வெங்காயத்தைத் திருடிய அப்துல் ரகுமான் அண்ணா நாகர் காவல் நிலையத்தில் ஒப்படைக்கபட்டார்.

இதையும் படிங்க: நீலகிரியில் முன்னோர்களைக் கொண்டாடும் 'சக்கலாத்தி' பண்டிகை!

Intro:மதுரையில் நூதன முறையில் வெங்காயத்தை திருடி விட்டு திரைப்பட பாணியில் செலவுக்கும் கடையில் இருந்த வேலையாளிடம் 1500 ரூபாய் வாங்கி சென்ற பலே திருடன் : கையும் களவுமாக பிடிப்பட்டான்Body:மதுரையில் நூதன முறையில் வெங்காயத்தை திருடி விட்டு திரைப்பட பாணியில் செலவுக்கும் கடையில் இருந்த வேலையாளிடம் 1500 ரூபாய் வாங்கி சென்ற பலே திருடன் : கையும் களவுமாக பிடிப்பட்டான்

மதுரை கோமதிபுரத்தில் உள்ள ஒரு பெரிய மளிகை கடையில் ஒரு 50 வயது மதிக்கதக்க நபர் ஒருவர் மஞ்சள் நிற சட்டை பேண்ட் அணிந்து கையில் கட்டை பையுடன் மளிகை பொருட்கள் வாங்க வந்தது போல கடைக்குள் சென்று செல்போன் பேசிக் கொண்டே இன்று விலை ஏறிக் கொண்டே போகும் வெங்காயத்தை முதலில் தான் கொண்டு வந்த கட்டை பையில் சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டு
2 கிலோ வரை திருடிக் கொள்கிறார்,

பின்பு நொறுக்குத் தீனி பாக்கெட்டுகளையும் தனது பையில் போட்டுக் கொண்டு கடையில் இருந்த பணியாட்களிடம் உங்களது முதலாளிடம் அரிசி வாங்க பணம் கொடுத்துள்ளேன் இப்ப அரிசி வேண்டாம் பணம் 1500 தர கேட்டுள்ளார் பணியாளும் கடையில் கூட்டம் இருந்ததால் தனது முதலாளியிடம் அரிசிக்கு பணம் தந்து விடவா எனக் கேட்டுள்ளார் அவரும் சரி என கூற பணத்தையும் பெற்றுக் கொண்டு அந்த நபர் சென்று விட்டார்.

பிறகு கடைக்கு வந்த முதலாளியிடம் 1500 ரூபாய் கொடுத்தது குறித்து வேலையாள் கூற முதலாளி அதிர்ச்சியடைந்துள்ளார் யார் அவர் என்ற சந்தேகத்தின் பேரில் கடையில் உள்ள சி.சி.டி.வி கேமராவில் பதிவான காட்சிகளை பார்த்த போது தான் அந்த மஞ்சள் சட்டை நபர் வெங்காயம் முதல் நொறுக்குத் தீனி வரை திருடும் காட்சிகள் பதிவாகியிருந்தன.

இதனை தொடர்ந்து நந்தா திரைப்பட பாணியில் 1500 ரூபாயையும் வாங்கி சென்றுள்ளார் . மேலும் இந்த திருட்டு ஆசாமி கடைக்கு மீண்டும் வந்தால் கையும் களவுமாக பிடிக்க எண்ணினர்.

மீண்டும் மாலை 6.00 மணியளவில் கடைக்கு வந்த அந்த திருட்டு நபரை பிடித்து விசாரணை செய்ததில் மதுரை ேகாமதிபுரம் கொன்றை வீதியை சேர்ந்த வருசை முகமது மகன் அப்துல் ரகுமான் வயது - 51 என்பது தெரிய வந்தது.

மளிகை கடையில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து போது அவர் கடந்த . ஒரு மாத காலமாக பிஸ்கட் முதல் பாசுமதி அரிசி பாக்கெட் வரை மதியம் சாப்பாட்டு நேரத்தில் கட்டை பையில் திருடி செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது.

அவரை பிடித்து அண்ணா நாகர் காவல் நிலையத்தில் ஒப்படைக்கபட்டார்.

இன்று வெங்காயத்தை
திருடி சென்ற சிசிடிவி காட்சியால் அப்பகுதி யில் பரபரப்பு ஏற்பட்டது.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.