ஊரடங்கு கட்டுப்பாடுகள் காரணமாக காலை 6 மணி முதல் 10 மணி வரை மட்டுமே கடைகள் திறக்க அனுமதி என்பதால், குறிப்பிட்ட நேரத்திற்குள் அத்தியாவசிய பொருட்களை வாங்க மக்கள் கூட்டம் கூட்டமாக செல்கின்றனர்.
இதனால், காலை நேரங்களில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதுகிறது. வாகனப்போக்குவரத்தும் அதிகரித்து காணப்படுகிறது.
நகரின் முக்கிய சாலைகள் தடுப்பு வைத்து அடைக்கப்பட்டதால் நெல்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் வாகன நெரிசல் அதிகமாகக் காணப்படுகிறது.
இதனால், வாகனங்கள் நீண்ட வரிசையில் மெதுவாக ஊர்ந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனை தவிர்க்க காவல்துறை உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: நீலகிரியில் 2ஆவது நாளாக மழை: பழங்குடியின மக்களுக்கு முகாம் அமைப்பு