தமிழ்நாட்டில் கரோனா ஊரடங்கு காரணமாக அனைத்து பள்ளிகளும் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில் எம்.ஜி.ஆர். சத்துணவு திட்டத்தின் கீழ் பயன்பெறும் மாணவர்களுக்கு அரிசி, பருப்பு மற்றும் மாதம் ஒன்றுக்கு மாணவர்களுக்கு தலா 10 முட்டைகள் உள்ளிட்டவை வழங்க அரசு அரசாணை பிறப்பித்தது.
இதையடுத்து சென்ற செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல் இத்திட்டத்தில் மாணவர்கள் பயனடைந்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் அரிசி தரமற்றுள்ளதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
மேலும் குழந்தைகளுக்கு உடல் உபாதைகள் ஏற்படுவதாக அவர்கள் கவலை தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அப்பள்ளி நிர்வாகத்திடம் கேட்கும்போது, "அரசால் வழங்கப்படும் அரிசியே மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது" எனத் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: புதுவையில் சுற்றுலாப் பயணிகளின் வருகை குறைவு: