ETV Bharat / state

'அரசு அலுவலர்கள் புகார்களை நிலுவையில் வைக்கக்கூடாது..!' - உயர் நீதிமன்றக்கிளை

அரசு அலுவலர்கள் புகார்களை நிலுவையில் வைக்கக்கூடாதென உயர் நீதிமன்ற மதுரைக் கிளையின் நீதிபதி ரமேஷ் தெரிவித்துள்ளார்.

’அரசு அலுவலர்கள் புகார்களை நிலுவையில் வைக்கக் கூடாது..!’ - மதுரை உயர் நீதிமன்றம்

author img

By

Published : Aug 9, 2022, 7:44 PM IST

மதுரை: திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரைச்சேர்ந்த ஜெகதீஸ் ராஜன் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனுவில், " திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூரில் ஒருங்கிணைந்த நீதிமன்றத்திற்கு அரசு வழக்கறிஞராக முத்துகிருஷ்ணன் என்பவரைக் கடந்த நவம்பர் 2021ஆம் ஆண்டு அரசு நியமனம் செய்தது.

இவரது நியமனத்தின் முறையான தகுதிகளை கடைபிடிக்கவில்லை. எனவே, இவரது பணியினை ரத்து செய்ய வேண்டும்" என மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதி ரமேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, பணி நியமனம் குறித்து உடனடியாகப் புகார்
வந்துள்ளது. ஆனால், இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.

பணி நியமனம் குறித்து புகார் பெறப்பட்டால் புகாரின் அடிப்படையில் சட்டத்திற்கு உட்பட்டு விசாரணை மேற்கொண்டு அதில் முடிவு காணப்பட வேண்டும். அவ்வாறு இல்லாமல் பெறப்பட்டப் புகாரை நீண்ட நாட்கள் நிலுவையில் வைத்திருக்கக் கூடாது. இவ்வாறு நிலுவையில் வைத்திருப்பது அலுவலர்கள் தங்களின் கடமையைச் செய்யத் தவறுவதாகக் கருதப்படும். இதனாலேயே நீதிமன்றத்திற்கு இதுபோன்ற வழக்குகள் வருகிறது” எனத்தெரிவித்தார்.

அரசு வழக்கறிஞர் நியமனம் குறித்து பெறப்பட்டப்புகாரின் அடிப்படையில் சட்டத்திற்கு உட்பட்டு விசாரணை நடத்தி 6 வாரத்தில் முடிவெடுக்க உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தார்.

இதையும் படிங்க: வேலூர் நிறுவனம் மீதான பண மோசடி வழக்கு:உரிய முறையில் விசாரிக்க உத்தரவு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.