மதுரையில் இருந்து வடமாநிலங்களுக்கு டிராக்டர்களை ஏற்றிச் செல்லக்கூடிய சரக்கு ரயில் ஒன்று மதுரை ரயில் நிலையத்தின் மூன்றாவது நடைமேடையில் வந்து கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இரண்டு பெட்டிகள் ஒன்றன்பின் ஒன்று மோதி தண்டவாளத்தில் இருந்து விலகின.
இதனை அறிந்து அங்கு சென்ற ரயில்வே ஊழியர்கள் விபத்து ஏற்பட்ட சரக்கு ரயிலை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் அதனை செய்தி எடுக்கச் சென்ற ஒளிப்பதிவாளர்கள் செய்தியாளர்கள் வலுக்கட்டாயமாக ரயில்நிலையத்தில் இருந்து வெளியேற்றப்பட்டனர். அவர்கள் பதிவு செய்யப்பட்ட காட்சிகளை ரயில்வே காவலர்கள் மூலம் அழிக்க மதுரை கோட்ட மேலாளர் உத்தரவிட்டதாக கூறப்படுகிறது.