ETV Bharat / state

Exclusive: மதுரை திருவேடகம் கோயிலில் தங்க ஏடு கண்டெடுப்பு! - edaganathar temple

மதுரை மாவட்டம், திருவேடகம் அருள்மிகு ஏடகநாதர் கோயிலில் திருஞானசம்பந்தர் பாடல் பதியப்பட்ட தங்க ஏடு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக ஆய்வாளர்கள் கூறி உள்ளனர்.

Exclusive: மதுரை திருவேடகம் கோயிலில் தங்க ஏடு கண்டெடுப்பு

author img

By

Published : Apr 23, 2023, 4:05 PM IST

Updated : Apr 23, 2023, 10:40 PM IST

மதுரை: மதுரையில் இருந்து வடக்கே வைகை நதியின் கரையோரம் அமைந்துள்ள சிவத்தலமே, திருவேடகம் ஆகும். இந்தத் திருத்தலம், காசிக்கு நிகரான சிறப்புடையதாக அறியப்படுகிறது. மிகவும் பழமை வாய்ந்த இந்தக் கோயிலின் மூலவர் ஏடகநாதேஸ்வரர், தாயார் ஏலவார் குழலி ஆகியோர் உள்ளனர். இவ்வாறு சிறப்புமிக்க திருவேடகம் கோயிலில், தமிழ்நாடு அரசால் நியமிக்கப்பட்டுள்ள திருக்கோயில் ஓலைச்சுவடிகள் பாதுகாப்பு - பராமரிப்பு - நூலாக்கத் திட்டப் பணிக் குழுவினர் சுவடிகள் இருப்பு குறித்து ஆய்வு செய்தனர்.

சுவடித் திட்டப் பணிக் குழுவின் ஒருங்கிணைப்பாளரும், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் பேராசிரியருமான முனைவர் சு.தாமரைப்பாண்டியன் அளித்த பிரத்யேக பேட்டி

அப்போது, கோயிலில் இருந்த தங்க ஏடு ஒன்றும், கோயில் வரவு செலவு கணக்குகள் அடங்கிய ஒரு சுவடிக்கட்டையும் அக்குழுவினர் கண்டறிந்துள்ளனர். மேலும், இது குறித்து சுவடித் திட்டப் பணிக் குழுவின் ஒருங்கிணைப்பாளரும், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் பேராசிரியருமான முனைவர் சு.தாமரைப்பாண்டியன் ஈடிவி பாரத் தமிழ்நாடு செய்திகளுக்குப் பிரத்யேகப் பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.

இதுதொடர்பாக பேசிய முனைவர் சு.தாமரைப்பாண்டியன், “தமிழ்நாடு முழுவதும் இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் உள்ள 45 ஆயிரத்துக்கும் மேற்பட்ட திருக்கோயில்களில் ஓலைச் சுவடிகள், செப்புப் பட்டயங்கள் உள்ளனவா என்பது குறித்து ஆய்வு செய்ய தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில், நாங்கள் தொடர்ந்து கள ஆய்வு செய்து வருகிறோம். இதுவரையில், சுமார் 200க்கும் அதிகமான கோயில்களில் கள ஆய்வு செய்து முடித்துள்ளோம்.

அந்த வகையில், மதுரை மாவட்டம், திருவேடகம் ஏடகநாதர் கோயிலில், எனது வழிகாட்டலின்படி சுவடிக் கள ஆய்வாளர்கள் கோ.விசுவநாதன் மற்றும் மா.பாலசுப்பிரமணியன் ஆகியோர் கள ஆய்வு செய்தனர். அப்போது, தங்கத்தால் செய்யப்பட்ட தங்க ஏடு ஒன்றைக் கண்டறிந்தனர். மேலும், கோயிலில் இருந்த ஓலைச்சுவடி கட்டு ஒன்றையும் கண்டறிந்தனர். அவற்றை நான் ஆய்வு செய்தபோது, தங்க ஏட்டில் திருஞானசம்பந்தர் இயற்றிய பாடல் ஒன்று எழுதப்பட்டுள்ளதைக் கண்டறிந்தேன்.

மேலும், கோயிலில் இருந்த ஓலைச்சுவடியில் கோயில் வரவு - செலவு விவரம் அடங்கிய தகவல்கள் இருப்பதையும் ஆய்வு செய்து உறுதி செய்தேன். இந்தக் கோயிலில் கண்டறியப்பட்டுள்ள தங்க ஏடு வரலாற்றுச்சிறப்புடையதாகும். இலக்கியப்பாடல் தங்க ஏட்டில் பதிந்த நிலையில் கிடைப்பது, தமிழ்நாட்டு வரலாற்றில் இதுவே முதல் முறை. இந்தத் தங்க ஏடு தோற்றப்பாடுக்குப் பின் ஒரு வரலாறு உள்ளது. இதனை, திருவேடகநாதர் கோயில் தல புராணம் தெளிவாக எடுத்துரைக்கிறது.

அதாவது, மதுரையை கூன்பாண்டியன் என்னும் மன்னர் ஆண்டு வந்தார். அவர் சமண சமயத்தைச் சார்ந்தவராக இருந்து வந்தார். அவரது மனைவியின் பெயர் மங்கையர்க்கரசி. அவர் (மனைவி) ஒரு சிறந்த சிவ பக்தை. சைவ சமயத்தைக் காப்பாற்ற எண்ணிய, அவரது மனைவி திருஞானசம்பந்தரை மதுரைக்கு வருமாறு அழைப்பு விடுத்தார். மதுரைக்கு வந்த திருஞானசம்பந்தர், திருநீறு பூசி கூன் பாண்டியனின் வெப்பு நோயை நீக்கினார்.

அதனைக் கண்டு அங்கிருந்த சமணர்கள் ஆத்திரமுற்று, அனல் வாதம், புனல் வாதம்புரிய அழைத்தனர். அதன்படி, தமது சமய மார்க்கம் சார்ந்த கருத்துடைய ஏட்டை தீயில் இட்டபோது, அது எரிந்து சாம்பல் ஆனது. ஆனால் , திருஞானசம்பந்தர் திருநள்ளாற்றுப் பதிகம் எழுதிய ஏட்டை தீயில் இட்டபோது, அது எரிந்து சாம்பல் ஆகாமல் இருந்தது. பின்பு, புனல் வாதத்தின்போது சமணர்கள் எழுதிய ஏட்டை ஆற்றில் விட்டனர். அது ஆற்றுடன் சென்றது.

ஆனால் சம்பந்தர், ‘வாழ்க அந்தணர்..’ என்று தொடங்கும் பதிகம் உள்ள ஏட்டை வைகை ஆற்றில் விட்டார். அது வைகை நதியின் நீரோட்டத்தை எதிர்த்துச் சென்றது. பாண்டிய மன்னரின் மந்திரியான குலச்சிறையார் குதிரையின் மீது ஏறி, வைகை நதியின் நீரோட்டத்தை எதிர்த்துச் செல்லும் ஏட்டினைப் பின் தொடர்ந்து சென்றார். ஏடு ஓரிடத்தில் வைகை ஆற்றின் கரையில் ஒதுங்கியது. அதனை அறிந்த பாண்டிய மன்னர், ஏடு கரை ஒதுங்கிய இடத்திற்கு வந்து பார்த்தார்.

அங்கு ஒரு சிவலிங்கம் இருப்பதையும் கண்டார். பின்னர், அங்கு ஒரு கோயில் எழுப்பினார். அந்தக் கோயில்தான் அருள்மிகு திருவேடகநாதர் கோயில் என்று அழைக்கப்பட்டது என்று தல புராணம் குறிப்பிடுகிறது. இந்தக் கதையில் திருஞானசம்பந்தர் ‘வாழ்க அந்தணர் ..’ எனும் பதிகம் எழுதி நதியில் இட்டதன் நினைவாக, அதே பாடலைத் தங்க ஏட்டில் எழுதி வைத்து, கோயிலார் பாதுகாத்து வருகின்றனர் என்பதை அறிய முடிகிறது. தங்க ஏட்டில் மேலே கூறிய ஒரு பாடல் மட்டுமே உள்ளது.

தங்க ஏடு எழுதப்பட்ட காலம் பற்றிய குறிப்பு ஏட்டில் காணப்படவில்லை. எனினும், சுவடியில் உள்ள எழுத்தமைதி மூலம் ஏடு எழுதப்பட்ட காலம் சுமார் 100 ஆண்டுகள் இருக்கலாம். மேலும், திருக்கோயில் சுவடி மற்றும் செப்புப் பட்டயங்களைப் பாதுகாக்க சிறப்பான நடவடிக்கை மேற்கொண்டு வரும் இந்து சமய அறநிலையத் துறையின் ஆணையர், கூடுதல் ஆணையர், பதிப்பாசிரியர் ஆகியோருக்கு எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: குரு பெயர்ச்சி 2023: குரு பகவானுக்கு சிறப்பு அபிஷேகம்!

Last Updated : Apr 23, 2023, 10:40 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.