ETV Bharat / state

கோகுல்ராஜ் கொலை வழக்கு: சுவாதி மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை - gokulraj

கோகுல்ராஜ் கொலை வழக்கில் சுவாதி மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

கோகுல்ராஜ் கொலை வழக்கு: சுவாதி மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை

author img

By

Published : Nov 30, 2022, 2:00 PM IST

மதுரை: ஓமலூரைச் சேர்ந்த பொறியியல் மாணவர் கோகுல்ராஜ், மற்றொரு சமூகத்தைச் சேர்ந்த பெண்ணை காதலித்ததாக கூறி, கடந்த 2015ஆம் ஆண்டு ஆணவ படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் தங்களுக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனைகளை நிறுத்தி வைக்கக் கோரி யுவராஜ் உள்ளிட்ட 10 பேர், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மேல்முறையீட்டு மனுக்களை தாக்கல் செய்தனர்.

இதனையடுத்து உயிரிழந்த கோகுல்ராஜின் தாய் சித்ரா மற்றும் சிபிசிஐடி தரப்பில் 5 பேர் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து அப்பீல் செய்யப்பட்டது. இந்த மனுக்களை விசாரித்த உயர் நீதிமன்ற மதுரைக்கிளை, இந்த கொலை வழக்கின் முக்கிய சாட்சி பிறழ் சாட்சியாக மாறியது ஏன் என்று கேள்வி எழுப்பியது.

மேலும் சுவாதியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவும் நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர். இதனைத்தொடர்ந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சுவாதி கடந்த வாரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது உயர் நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ் மற்றும் என்.ஆனந்த் வெங்கடேஷ் ஆகியோர் விசாரணை நடத்தினர்.

அந்த நேரத்தில் நீதிபதிகள் எழுப்பிய கேள்விகளுக்கு, சுவாதி அளித்த பதில்கள் அனைத்தும் பதிவு செய்யப்பட்டன. ‘நான் அவள் இல்லை’ என்றே பெரும்பாலான கேள்விகளுக்கு சுவாதி பதிலளித்தார். மேலும் ‘தெரியாது’ என்றும் அதிகளவில் பதிலளித்தார். அதேநேரம், ‘சம்பவம் நடந்த 23.05.2015 அன்று காலை நீங்கள் கோகுல்ராஜை பார்த்தீர்களா?’ என்று நீதிபதிகள் கேட்டனர்.

அதற்கு, ‘இல்லை. நான் அவரை பார்க்கவில்லை’ என்று சுவாதி பதிலளித்தார். இதனையடுத்து கோகுல்ராஜுடன் சுவாதி கோயிலுக்கு வந்தது, கோயிலை விட்டு வெளியே வந்தது உள்ளிட்ட காட்சிகளின் சிசிடிவி பதிவுகளை, அவருக்கு எல்இடி டிவியில் நீதிபதிகள் காண்பித்தனர்.

அப்போது ‘கோகுல்ராஜின் குடும்பம், பின்னணி குறித்து எனக்கு தெரியாது. டிவியில் உள்ளது கோகுல்ராஜ்தான். ஆனால் அவருடன் செல்லும் பெண் நான் இல்லை’ என்று நீதிபதிகளிடம் சுவாதி மீண்டும் மீண்டும் கூறினார். தொடர்ந்து நீதிபதிகள் அவரது முகம் தெளிவாக பதிவான குளோஸ் அப் காட்சிகளை காட்டினர்.

அதை பார்த்த சுவாதி கண்ணீர் விட்டு கதறினார். பின்னர் நீதிபதிகள் கூறுகையில், ‘‘இது நீங்கள் இல்லையா? உங்களையே உங்களுக்கு அடையாளம் தெரியவில்லையா? இந்த வழக்கின் முக்கிய சாட்சி நீங்கள்தான். நீங்கள் உண்மைகளை கூற வேண்டும் என்பதற்காகத்தான் இவ்வளவு போலீஸ் பாதுகாப்புடன் இங்கு அழைத்து வரப்பட்டுள்ளீர்கள்.

உண்மைகளை கூறத் தவறினாலோ, பொய்யான தகவல்களை தெரிவித்தாலோ மீண்டும் மீண்டும் குறுக்கு விசாரணைக்காக இந்த நீதிமன்றத்திற்கு நீங்கள் வர வேண்டியது நேரிடும்’ என்றனர். இதன் பின்னர் சுவாதிக்கு நீதிபதிகள் கால அவகாசம் வழங்கினர். அப்போது தனக்கு மயக்கம் வருவதாக சுவாதி தெரிவித்தார்.

எனவே நீதிமன்ற மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சுவாதிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அப்போது, ‘நீங்கள் பேசியதாக கூறப்படும் ஆடியோவை சோதனைக்கு அனுப்பியுள்ளோம். அதில் உண்மை தெரிந்துவிடும்’ என நீதிபதிகள் தெரிவித்தனர். தொடர்ந்து, ‘நீதிமன்றம் விளையாட்டு மைதானமா? சத்ய பிரமாணம் எடுத்தபின் பொய் சாட்சி கூறுவது ஏன்? வீடியோவில் உங்களையே பார்த்து தெரியாது என்கிறீர்கள்.

எவ்வளவு நாட்கள் உண்மையை மறைக்க முடியும்? குழந்தைகள் மீது சத்தியம் செய்து விட்டு, உங்களைப் பார்த்து நீங்களே தெரியாது என சொன்னால் இந்த நீதிமன்றம் குறித்து என்ன நினைக்கிறீர்கள்? உண்மையைக் கூறுவதால் ஏதேனும் பிரச்னை எழுமெனில் அவற்றையாது சொல்லுங்கள்’ என நீதிபதிகள் தெரிவித்தனர்.

இதற்கு பதிலளித்த சுவாதி, ‘எனக்கு தெரிந்ததை சொல்லிவிட்டேன்’ என்றார். தொடர்ந்து பேசிய நீதிபதிகள், ‘கீழமை நீதிமன்றத்தைப் போல, இந்த நீதிமன்றம் எளிதாக கடந்து செல்லாது. உண்மையை மறைத்தால், நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டிய சூழல் வரும்.

உண்மை என்றைக்கானாலும் சுடும்’ என வழக்கு விசாரணையை 30ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர். இதன்படி தற்போது பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சுவாதி சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் இன்று (நவ 30) ஆஜரானார்.

இந்த நிலையில் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், “சிசிடிவி காட்சிகளை போட்டு காண்பித்தோம். சிசிடிவி காட்சியில் உள்ள நபர்களை தெரியுமா? என கேட்டோம். ஆனால் அவர் எனக்கு தெரியவில்லை என மறுத்து விட்டார். எங்களுக்கு வியப்பாக உள்ளது. நீதிமன்றத்தை கேலிக்கு உள்ளாக்கி உள்ளார்.

விளைவுகளை தெரிந்தே பொய் தகவல்களை வழங்கினார். கீழமை நீதிமன்றத்தில் ஒரு விதமாக கூறி உள்ளார். மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கினோம். மீண்டும் அவர் நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தார். நீதிமன்ற அவமதிப்பு செய்துள்ளார். பொய் கூறி உள்ளார் என்பதற்கான போதிய முகாந்திரம் உள்ளது.

எனவே சுவாதிக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும். இதற்கு சுவாதி விளக்கம் அளிக்க வேண்டும். இந்த வழக்கின் விசாரணை இரண்டு வாரம் ஒத்தி வைக்கப்படுகிறது” என உத்தரவிட்டனர்.

இதையும் படிங்க: மரக்காணம் அருகே கழிவு நீரால் கடலின் நிறம் மாறும் அபாயம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.