மதுரை: பொறியியல் பட்டதாரி கோகுல்ராஜ் ஆணவக்கொலை வழக்கில் யுவராஜ் உள்பட 11 பேர் குற்றவாளிகள் என மதுரை மாவட்ட வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
மேலும் இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட அருள்செந்தில், சங்கர், செல்வக்குமார், சுரேஷ், தங்கதுரை ஆகியோர் வழக்கிலிருந்து விடுவித்தும் மற்றவர்கள் அனைவரும் குற்றவாளிகள் எனவும் நீதிபதி தீர்ப்பளித்தார். குற்றவாளிகளுக்கான தண்டனை விவரங்கள் வரும் மார்ச் 8ஆம் தேதி அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குற்றவாளிகள்
1. யுவராஜ்
2. அருண் - யுவராஜின் கார் ஓட்டுநர்
3. ஸ்ரீதர்
4. ரஞ்சித்
5. செல்வராஜ்
6. சதீஷ்குமார்
7. அமுதரசன்
8. சந்திரசேகரன்
9. குமார் (எ) சிவக்குமார்
10. பிரபு
11. கிரி
உயிரிழப்பு
- ஜோதிமணி