உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் நவராத்திரி உற்சவ விழா கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் கோயிலுக்கு வந்து கொலுசாவடியில் வைக்கப்பட்டுள்ள கொலு அலங்கார பொம்மைகள், குறிப்பாக சிவபெருமானின் 64 திருவிளையாடல்கள் தொடா்பான பொம்மைகள் உள்ளிட்டவற்றை ஆர்வத்துடன் கண்டு ரசித்து வருகின்றனர்.
தொடர்ந்து கொலு மண்டபத்தில் (உற்சவர்) அம்மன் நாள்தோறும் பல்வேறு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.
இந்நிலையில் நவராத்திரி திருவிழாவின் 8ஆம் நாளான இன்று மகிஷாசுரமர்த்தினி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அன்னை மீனாட்சி காட்சியளித்தார். இதனை ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
இதையும் படிங்க: மதுரை மல்லியின் விலை ரூ.1,200ஆக உயர்வு