ETV Bharat / state

கூடுதல் பெட்டிகளுடன் கிளம்பிய சிலம்பு எக்ஸ்பிரஸ்; தென்காசி ரயில் பயணிகள் வரவேற்பு! - SILAMBU EXPRESS

தாம்பரம் - செங்கோட்டை சிலம்பு எக்ஸ்பிரஸ் ரயிலில் கூடுதலாக 6 பெட்டிகள் இணைக்கப்பட்டு இன்று (நவ.27) முதல் இயக்கப்படும் நிலையில் தென்காசி மாவட்ட ரயில் பயணிகள் சங்கம் வரவேற்பு தெரிவித்துள்ளது.

ரயில் கோப்புப்படம்
ரயில் கோப்புப்படம் (Etv Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 27, 2024, 2:06 PM IST

தென்காசி: செங்கோட்டையில் இருந்து சங்கரன்கோவில் வழியாக சென்னை தாம்பரத்திற்கு சிலம்பு எக்ஸ்பிரஸ் ரயில் வாரத்திற்கு 3 முறை 17 பெட்டிகளுடன் இயக்கப்பட்ட நிலையில், கூடுதல் பெட்டிகளை இணைக்க வேண்டும் என நீண்ட நாட்களாக பயணிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். அந்த வகையில், சிலம்பம் விரைவு ரயிலில் கூடுதலாக 6 பெட்டிகள் இணைக்கப்படுவதாகத் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இன்று முதல் அந்த சேவை தொடங்கியுள்ள நிலையில், தென் தமிழக ரயில் பயணிகள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது.

சிலம்பு எக்ஸ்பிரஸ்: தாம்பரம் - செங்கோட்டை இடையே (வண்டி எண்- 20681/20682) சிலம்பு எக்ஸ்பிரஸ் வாரம் மும்முறை தற்போது இயக்கப்பட்டு வருகிறது. சிலம்பு எக்ஸ்பிரஸ் முதலில் 2013 ரயில்வே பட்ஜெட்டில் சென்னை எழும்பூர் - காரைக்குடி இடையே இயங்கும் என அறிவிக்கப்பட்டு, 22 ஜூன் 2013 அன்று தனது முதல் சேவையை வாரம் இருமுறை ரயிலாக சென்னை எழும்பூர் - மானாமதுரை இடையே தொடங்கியது. பின்னர் 5 மார்ச் 2017 முதல் செங்கோட்டை வரை நீட்டிக்கப்பட்டது. 25 பிப்ரவரி 2019 முதல் வாரம் இருமுறையிலிருந்து வாரம் மும்முறை ரயிலாக சேவை நாட்கள் அதிகரிக்கப்பட்டன.

மதுரை ரயில் நிலையம்
மதுரை ரயில் நிலையம் (Etv Bharat Tamil Nadu)

அதன் பின்னர், ஏப்ரல் 15, 2022 முதல் சென்னை எழும்பூர் - செங்கோட்டை சிலம்பு எக்ஸ்பிரஸ் அதிவிரைவு ரயிலாக மாற்றப்பட்டு, தற்போது தாம்பரம் - செங்கோட்டை இடையே இயக்கப்பட்டு வருகிறது. சென்னை எழும்பூரில் நடைமேடை நீளம் பற்றாக்குறை காரணமாக 17 பெட்டிகளாகவே இயக்கப்பட்டு வந்த சிலம்பு எக்ஸ்பிரஸ் ரயில், தற்போது தாம்பரத்திற்கு மாற்றப்பட்டுள்ளதால் கூடுதலாக 6 பெட்டிகள் இணைத்து மொத்தம் 23 பெட்டிகளாக இயங்குகிறது.

அதன்படி கூடுதலாக ஒரு இரண்டடுக்கு ஏசி பெட்டியும், 2 மூன்றடுக்கு ஏசி பெட்டியும், 2 தூங்கும் வசதி பெட்டியும், ஒரு முன்பதிவு இல்லாத பொதுப் பெட்டியும், இன்று (நவ.27) முதல் 2025 ஜன.30 வரை இணைக்கப்பட உள்ளது. இதனை நிரந்தரமாக்கி தினசரி ரயிலாக இயக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: யானைகளை காக்கும் ஏ.ஐ. கேமராக்கள்... தமிழக வனத்துறையின் புதிய முயற்சி!

இதுகுறித்து தென்காசி மாவட்ட ரயில் பயணிகள் சங்கத் தலைவர் பாண்டியராஜா கூறுகையில், "சிலம்பு எக்ஸ்பிரஸ் ரயில் 17 பெட்டிகளுடன் இயங்கி வந்த நிலையில், தற்போது கூடுதலாக 6 பெட்டிகள் இணைக்கப்பட்டு 23 பெட்டிகளுடன் இயக்க நடவடிக்கை எடுத்த தெற்கு ரயில்வே மண்டல மற்றும் மதுரை ரயில்வே கோட்ட அதிகாரிகளுக்கு நன்றி.‌ ஆறு பெட்டிகள் கூடுதலாக இணைப்பதால் இரண்டடுக்கு ஏசியில் 48 பேரும், மூன்றடுக்கு ஏசியில் 128 பேரும், இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டியில் 144 பேரும், பொதுப்பெட்டியில் தோராயமாக 200க்கு மேற்பட்டோர் என கூடுதலாக 520க்கும் மேற்பட்டோர் பயணிக்க முடியும்.

இதனால், தெற்கு ரயில்வேக்கு வாரத்திற்கு ரூ.18 லட்சம் வரை கூடுதல் வருமானமாக கிடைக்கும். இதைப்போல பாவூர்சத்திரம், அம்பை, கல்லிடைக்குறிச்சி, சேரன்மகாதேவி ஆகிய ரயில் நிலையங்களில் நடைமேடையை 24 பெட்டிகள் நிறுத்தும் அளவுக்கு நீட்டித்து (வண்டி எண் 20683/20684) தாம்பரம் - செங்கோட்டை ரயிலிலும், 24 பெட்டிகள் இணைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், சிலம்பு எக்ஸ்பிரஸ் ரயிலையும், பாவூர்சத்திரம் வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை ரயிலையும் தினசரி இயக்க தெற்கு ரயில்வே நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனத் தெரிவித்தார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ்ஆப்
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ்ஆப் (Etv Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.