மதுரை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய ஜி.கே. வாசன், “மக்களவைக் கூட்டணி உள்ளாட்சியிலும் நல்லாட்சி ஏற்படுத்தும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது. மத்திய மாநில அரசுகளின் ஒத்தக் கருத்தின் அடிப்படையிலே, தமிழகத்திற்கு அதிக திட்டங்கள் வரும் நல்ல நிலை ஏற்பட வேண்டும். நிலுவையில் உள்ள திட்டங்கள் எல்லாம் தங்குதடையின்றி, உரிய நேரத்தில் நிறைவேற்றப்பட வேண்டும்.
பிரதமர் மோடி இந்தியாவில் உள்ள அனைத்து தரப்பு மக்களின் ஆதரவையும் பெற்று அதிக இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்து இருக்கிறார் என்பதில் மாற்று கருத்து இருக்க முடியாது. ஜனநாயகத்தில் உண்மை நிலையை ஏற்றுக்கொள்வது தான் எதிர்க்கட்சிகளுக்கு அழகு” என்றார்.