மதுரை யாகப்பா நகர் பாண்டியன் தெரு பகுதியைச் சேர்ந்த சிலர் சொந்தமாக ஆடுகளை வளர்த்து வருகின்றனர். இந்நிலையில் நேற்றிரவு (ஆக.5) சிறிய வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள் வீட்டு வாசலில் கட்டி வைத்திருந்த சுமார் 30க்கும் மேற்பட்ட ஆட்டுக் குட்டிகளை திருடிச் சென்றனர். காலை எழுந்து பார்த்த உரிமையாளர்கள் ஆடுகள் திருடப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
மேலும், அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தபோது அடையாளம் தெரியாத நபர்கள் ஆட்டுக்குட்டிகளை திருடிச் சென்றது தெரியவந்தது. இதனையடுத்து அப்பகுதி மக்கள் அளித்த புகாரின் பேரில் அண்ணாநகர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
முதல்கட்ட விசாரணையில், ஊரடங்கால் வருமானமில்லாத காரணத்தால் அதே பகுதியைச் சேர்ந்த சிலர் இந்த திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது. மேலும், இந்த சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் அடிப்படையில் அதே பகுதியை சேர்ந்த சிலரை காவல் துறையினர் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: கரோனாவுக்கு குட்பை: வீடு திரும்பிய அமைச்சருக்கு உற்சாக வரவேற்பு