திருப்பரங்குன்றத்தைச் சேர்ந்த கௌதம் என்பவர் நேற்று முன்தினம் (ஜூன் 14) திருநகர் கனரா வங்கி முன்பு தவறவிட்ட ஒரு பவுன் தங்க நகையை திருநகர் காவல் நிலையத்தில் பணிபுரிந்துவரும் ஊர்க்காவலர் சந்திரசேகர் என்பவர் ரோந்துப் பணியில் இருந்தபோது கண்டெடுத்து திருநகர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.
அந்தத் தங்க நகையை நேற்று (ஜூன் 15) திருநகர் காவல் ஆய்வாளர் கணேசன் நகையின் உரிமையாளரைக் கண்டுபிடித்து காவல் நிலையத்திற்கு வரவழைத்து நகையை ஒப்படைத்தார்.
மேலும் நேர்மையாகச் செயல்பட்ட ஊர்க்காவலர் சந்திரசேகரை திருநகர் காவல் ஆய்வாளர் கணேசன் பொன்னாடை போர்த்தி கௌரவித்தார்.
இதையும் படிங்க: ஏழு நிமிடங்களில் இந்திய அணியின் பயிற்சியாளர் ஆனேன் - கேரி கிரிஸ்டன்!