கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகின்றன. அதன் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதையடுத்து கரோனா பணிகளுக்கு அரசு, அரசுசார நிறுவனங்கள், தனி நபர் உள்ளிட்டோர் தங்களால் முடிந்த நிவாரண நிதிகளை வழங்கலாம் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். அதன்படி பல்வேறு அமைப்பினர் தங்களால் முடிந்த உதவிகள், நிவாரண நிதிகளை வழங்கிவருகின்றனர்.
அதைத்தொடர்ந்து, மதுரை அலங்காநல்லூர் பகுதியில் கரோனா தடுப்புப் பணிகளில் ஈடுபட்டு வரும் மருத்துவர்கள், தூய்மைப் பணியாளர்கள், காவலர்கள் 360 நபர்களுக்கு பத்து வகையான காய்கறிகள் அடங்கிய தொகுப்புகளை தன்னார்வலர்கள் வழங்கினர். மொத்தம் இரண்டு டன் அளவிலான காய்கறிகள் வாங்கப்பட்டு அவர்களுக்கு பிரித்துகொடுக்கப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: நிவாரண உதவிக்கு இடைத்தரகர்களை நம்ப வேண்டாம் - அமைச்சர் அன்பழகன்