மதுரையில் கரோனா பாதுகாப்பு நடவடிக்கையாக பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர் மற்றும் வைட்டமின் மாத்திரைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ, மக்களுக்கு கபசுரக் குடிநீர் மற்றும் வைட்டமின் மாத்திரைகளை வழங்கினார். அதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், மதுரை மாவட்டதில் உள்ள நான்கு லட்சம் பேரில் ஒன்றரை லட்சம் பேருக்கு இதுவரை கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.
அதையடுத்து தமிழ்நாட்டில் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்படுவது நிறுத்தப்படவுள்ளதாகக் கூறி காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் செய்ய இருப்பது குறித்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், அதிமுக அரசு ஒருபோதும் விவசாயிகளுக்கு எதிராகவும், அவர்களை பாதிக்கின்ற வகையிலும் நடவடிக்கை எடுக்காது. விவசாயிகளுக்கு வழங்கப்படும் இலவச மின்சாரம் தொடர்ந்து வழங்கப்படும். அதற்கான நடவடிக்கையை முதலமைச்சர் எடுப்பார் எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: 'இலவச மின்சாரம் வழங்கினால் மட்டுமே மின் திருத்தச் சட்டத்தை ஏற்போம்' - அமைச்சர் தங்கமணி