மதுரையில் இன்று (செப் 4) 123 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். 52 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். சிகிச்சைப் பலனின்றி நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்.
இதுவரை மதுரை மாவட்டத்தில் 14,575 பேர் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 13 ஆயிரத்து 334 பேர் பூரண குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். இதுவரை 364 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனர். தற்போது 877 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.