ETV Bharat / state

ஆளுங்கட்சியினரின் அத்துமீறல் அதிகரிக்கத்தொடங்கியுள்ளது - முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ - மதுரை மாவட்ட செய்திகள்

மதுரை மாநகரில் ஒப்பந்தப்புள்ளிகள் கோருவதில் இருந்து பல்வேறு வகையில் ஆளுங்கட்சியினரின், அத்துமீறல் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

ஆளுங்கட்சியினர் அத்துமீறல் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது

author img

By

Published : Oct 6, 2021, 3:53 PM IST

மதுரை: மாநகரில் போக்குவரத்து நெருக்கடியை சரி செய்யவும், சட்டம் ஒழுங்குப் பிரச்னைகளுக்கு உரிய தீர்வு காணவும் வலியுறுத்தி மதுரை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ மனு கொடுத்தார்.

பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "மாநகர் மதுரையில் சாலைகள் மிகவும் பழுதடைந்து உள்ளது. தற்போது மழைக்காலம் என்பதால் போர்க்கால அடிப்படையில் அவற்றை உடனடியாக சரி செய்ய வேண்டும். இதற்காக எங்களது ஆட்சியில் வழங்கப்பட்ட ஒப்பந்தப்புள்ளிகளைத் தற்போதைய திமுக அரசு ரத்து செய்துள்ளது.

புதிய ஒப்பந்தப்புள்ளிகளை அறிவித்து வேலைகளைத் தொடங்க வேண்டும். தற்போது மாநகராட்சியால் அறிவிக்கப்பட்டுள்ள ஒப்பந்தப்புள்ளி கோருதலில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளன. அதேபோன்று வீட்டு வசதி வாரியத்தில் நடைபெற்ற டெண்டரில் ஒரு சில நபர்களே கலந்து கொள்ளும் வகையில், முறைகேடு நடைபெற்றுள்ளது. ஆளுங்கட்சியினரின் அத்துமீறல் அதிகரித்துள்ளது.

ஆளுங்கட்சியினரின் அத்துமீறல் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது

சாலைத் தடுப்புகள்

மதுரையில் அமைக்கப்பட்ட சாலைத் தடுப்புகள் பல்வேறு இடங்களில் தேவையற்றதாக உள்ளன. இவற்றையெல்லாம் குழு ஒன்று அமைத்து எங்கு தேவையோ அங்கு அமைத்துவிட்டு தேவையற்ற இடங்களில் உள்ள சாலைத் தடுப்புகளை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும்.

குறிப்பாக மதுரை அண்ணா பேருந்து நிலையத்திலிருந்து கோரிப்பாளையம் வரை உள்ள சாலையில் சாலைத் தடுப்பு தேவையற்றது. ஆம்புலன்ஸ் சென்று வருவதற்கு நெருக்கடியாக உள்ளது. சாலைகள் அகலமாகவும் விரிவாகவும் உள்ள இடங்களில் மட்டுமே சாலைத்தடுப்பு அமைப்பது குறித்து அரசு பரிசீலனை செய்ய வேண்டும். ஒருவழிப்பாதைகளில்கூட சாலைத்தடுப்பு அமைப்பது தேவையற்ற ஒன்றாகும்.

உயர்மட்ட பாலங்கள்

மதுரையில் உயர்மட்ட பாலங்கள் அமைப்பது குறித்து பொதுப்பணித்துறை அமைச்சரின் அறிவிப்பை வரவேற்கிறேன்.

அதேபோன்று அண்மைக் காலமாக மதுரை மாநகரில் செயின் பறிப்பு, கொலை, வழிப்பறி சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இவற்றையெல்லாம் மாநகர காவல் துறை கட்டுப்படுத்த வேண்டும். கீரைத்துறை பகுதியில் புறக்காவல் நிலையம் ஒன்றை அமைக்க வேண்டும். தற்போது இயங்காமல் உள்ள புறக்காவல் நிலையங்களை உடனடியாக இயக்குவதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இரவு நேர ரோந்துக் காவலை அதிகரிக்க வேண்டும்" என்றார்.

இதையும் படிங்க: லக்கிம்பூர் செல்ல ராகுல், பிரியங்காவுக்கு அனுமதி

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.