ETV Bharat / state

'ஜெயலலிதாவை போல தைரியமான முடிவுகளை ஈபிஎஸ் எடுப்பார்' - செல்லூர் ராஜூ பேச்சு - AIADMK News in Tamil

கூட்டணி விவகாரத்தில் தமிழக மக்கள் நலனை முன்வைத்து, ஜெயலலிதா போல தைரியமான முடிவுகளை எடப்பாடி பழனிசாமி எடுப்பார் என செல்லூர் கே.ராஜூ தெரிவித்துள்ளார்.

மதுரை மாநகராட்சி ஆணையரிடம் அதிமுக மாமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை மனு

author img

By

Published : Jul 4, 2023, 10:57 PM IST

மதுரை மாநகராட்சி ஆணையரிடம் அதிமுக மாமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை மனு

மதுரை: மதுரை மாநகராட்சி பகுதிகளில் குடிநீர், கழிவுநீர், பாதாள சாக்கடை, சாலை உள்ளிட்ட அடிப்படை தேவைகளை நிறைவேற்ற வலியுறுத்தி மாநகராட்சி ஆணையர் பிரவீன்குமாரிடம் அதிமுக மாமன்ற உறுப்பினர்களுடன் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ இன்று (ஜூலை 4) கோரிக்கை மனு அளித்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த செல்லூர் ராஜூ பேசுகையில், “மாநகராட்சி நிர்வாகம் மிக மிக மெத்தனமாக நடைபெறுகிறது. மாநகராட்சியை மேம்படுத்த தமிழக அரசு சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்யவில்லை. மாநகராட்சியை குற்றம்சாட்டி எம்.எல்.ஏ, துணை மேயர் ராஜினாமா செய்வதாக அறிவித்ததில் இருந்தே மாநகராட்சியின் நிலை அனைவருக்கும் தெரியும் என்றார்.

கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் மக்களை திரட்டிப் போராட்டம் நடத்தப்படும் என்று கூறினார். மதுரையில் அதிமுக ஆட்சியில் தொடங்கி முடிவுற்ற திட்டங்களைத் தான், திமுகவினர் வந்து திறந்து வைத்ததாக கூறியுள்ளார். இந்நிலையில், கோரிப்பாளையம் மற்றும் மேலமடை பகுதிகளில் மேம்பாலம் அமைப்பதற்கான பணிகளை மதுரை மாநகராட்சி இன்னும் தொடங்கவில்லை என்று குற்றம்சாட்டினார்.

பெரியார் பேருந்து நிலையம் குறித்து அன்றைக்கு சட்டமன்ற உறுப்பினராக இருந்த பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் அதிமுகவை விமர்சனம் செய்துவிட்டு, ஆட்சி மாறிய பிறகு அவர்களே அதனை திறந்து வைத்ததாகவும் தெரிவித்தார்.

இதையும் படிங்க: ஒன்றியக்குழு கூட்டத்திற்கு வராத மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் - திருப்பத்தூரில் ரணகளம்!

வண்டியூர் மாரியம்மன் தெப்பக்குளத்தில் கடந்த 40 ஆண்டுகளுக்கு பிறகு, நிரந்தரமாய் தண்ணீர் திறப்பதற்கு முயற்சி மேற்கொண்டு அந்தத் திட்டத்தை நிறைவேற்றியது அதிமுக தான் என்று பெருமிதம் கூறினார். ஆனால், இன்று அதில் கலக்கும் கழிவுநீரை கூட சுத்தம் செய்ய மதுரை மாநகராட்சியால் முடியவில்லை என்றும் இது குறித்து கேட்டால் ஆள்பற்றாக்குறை என்று சொல்தாக கூறினார்.

மதுரை மாநகராட்சியில் அதிமுக மாமன்ற உறுப்பினர்களுக்கு உரிய மரியாதை வழங்கப்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். 'மாமன்னன்' படம் பார்க்க எனக்கு நேரம் கிடைக்கவில்லை. அது குறித்து கருத்து சொல்வது நன்றாக இருக்காது. வேகமாக சென்று மக்களை சந்திக்க வேண்டும் என்பதால் எடப்பாடி பழனிசாமி புதிய வாகனம் வாங்கி உள்ளார்.

எடப்பாடி பழனிசாமி வல்லவனுக்கு வல்லவன். அதிமுக வெற்றி பாதையை நோக்கி பயணிக்கிறது. திமுக கூட்டணியில் இருக்கும் கட்சிகள் அரசுக்கு எதிராக வாயே திறக்கவில்லை என்றாலும் கூட, கூட்டணி கட்சிகளுக்கு சீட் ஒதுக்கீடு செய்யும்போது தான் கட்சிகள் திமுக கூட்டணியில் இருக்குமா? என தெரியவரும். தேர்தல் நேரத்தில் அதிமுக கூட்டணி முடிவு செய்யப்படும். கூட்டணி விவகாரத்தில் தமிழக மக்கள் நலன் கருதி ஜெயலலிதா போல தைரியமான முடிவுகளை எடப்பாடி பழனிசாமி எடுப்பார்" என கூறினார்.

இதையும் படிங்க: நீட் தேர்வில் ஆள்மாறாட்டம்... எய்ம்ஸ் மாணவர் உள்பட கும்பல் கைது! டெல்லி போலீசார் அதிரடி!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.