மதுரை: கரோனா பெருந்தொற்றின் காரணமாக மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு, பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி இந்து சமய அறநிலையத் துறையால் அனுமதி அளிக்கப்படுகிறது.
மேலும் திருக்கோயில் அன்னதானத் திட்டத்தின்கீழ் நாளொன்றுக்கு 200-க்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு உணவுப் பொட்டலங்கள் வழங்கப்படுகின்றன. இந்நிலையில் மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் பக்தர்களுக்கு வழங்கப்படும் அன்னதான உணவு, நேற்று (செப்.20) முதல் அரசு உத்தரவின்படி வாழை இலையில் பரிமாறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து வருகின்ற அக்டோபர் 31ஆம் தேதிவரை ஒவ்வொரு வாரமும் திங்கள் முதல் வியாழக்கிழமை வரை அன்னதானமானது வாழை இலையிலும், இதர மூன்று நாள்களில் பொட்டலங்களாகவும் வழங்கப்படும் எனக் கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: கோவை இளைஞர்களின் முயற்சியால் உருவான 'மகிழ் வனம்'