மதுரையில் சிம்மக்கல் அக்ரஹார பகுதியில் உள்ள வீட்டின் கிணற்றில் பூனைக்குட்டி ஒன்று தவறி விழுந்துள்ளது. இதைப் பார்த்த வீட்டின் உரிமையாளர் உடனடியாகத் தீயணைப்புத் துறைக்குத் தகவல் கொடுத்தார்.
இந்தத் தகவலின்பேரில் விரைந்த தீயணைப்புத் துறையினர், சுமார் ஒரு மணி நேரம் போராடி கிணறுக்குள் விழுந்த பூனைக்குட்டியைப் பத்திரமாக மேலே கொண்டுவந்தனர்.
தீயணைப்புத் துறையினர் துரிதமாகச் செயல்பட்டு பூனைக்குட்டியை உயிருடன் மீட்டதற்கு அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் பாராட்டுகள் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: கட்டுக்கடங்காத கொரோனா; 4,000 உயிர்கள் பலி