ETV Bharat / state

மதுரையில் முகக்கவசம் அணியாதவர்களிடம் ரூ. 59 ஆயிரத்து 800 அபராதம் வசூல்! - மதுரை செய்திகள்

மதுரை: முகக் கவசம் அணியாமல் பொது இடங்களுக்கு வருகை புரிந்த நபர்களிடமிருந்து அபராதமாக ரூபாய் 59 ஆயிரத்து 800 வசூலிக்கப்பட்டுள்ளதாக மதுரை மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தெரிவித்துள்ளார்.

Mask
Mask
author img

By

Published : May 20, 2020, 11:03 PM IST

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 'மதுரை மாவட்டத்தில் கரோனா வைரஸ் தொற்று ஏற்படாமல் இருக்க பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நோய்த்தொற்றைத் தடுப்பதற்காக மாநில பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ், ஊரடங்கு உத்தரவு மே 18ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

மேலும் பொது இடங்கள் மற்றும் பணிபுரியும் இடங்களில் அனைவரும் கண்டிப்பாக முகக்கவசம் அணிந்து இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்ட நிலையில், இன்று முகக்கவசம் அணியாமல் சென்ற மதுரையைச் சேர்ந்த 447 நபர்களுக்கும் ஊரகப் பகுதியைச் சேர்ந்த 55 நபர்களுக்கும் அபராதம் விதிக்கப்பட்டு, அபராதத் தொகையாக ரூபாய் 59 ஆயிரத்து 800 வசூலிக்கப்பட்டுள்ளது.

'தமிழ்நாடு அரசின் உத்தரவின்படி பொது இடங்களில் முகக்கவசம் அணியாதவர்கள் மீது, அபராதம் விதிக்கப்படும். எனவே, பொதுமக்கள் தாங்கள் பணிபுரியும் இடங்கள் மற்றும் பொது இடங்களில் முகக்கவசம் கட்டாயமாக அணிந்து வர வேண்டும்' என மதுரை மாவட்ட ஆட்சியர் மருத்துவர் டி.ஜி. வினய் கூறியுள்ளார்.

இதையும் படிங்க: லாக்டவுன் 4.0: கட்டுப்பாடுகளை நாங்கள் கூர்ந்து கவனிக்கிறோம் - உள்துறை அமைச்சகம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.