மதுரை கிழக்குத் தொகுதி திமுக சட்டப்பேரவை உறுப்பினர் மூர்த்தி ஜூன் 22ஆம் தேதி, உமச்சிகுளம் பகுதியைச் சேர்ந்த பாஜக இளைஞரணி நிர்வாகி சங்கரபாண்டியை தாக்க முயலும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.
அதனால் இருதரப்பினரும் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஜூன் 23ஆம் தேதி புகார் அளித்தனர்.
இந்த நிலையில் மதுரை மாவட்டம் ஊமச்சிகுளம் காவல் நிலையத்தில் சட்டப்பேரவை உறுப்பினர் மூர்த்திக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதற்கான விசாரணையில் காவல் துறையினர் ஈடுபட்டுவருகின்றனர்.
இதையும் படிங்க: பாஜக நிர்வாகியை தாக்க முயன்ற திமுக எம்எல்ஏ: 'சிசிடிவி' காட்சி வைரல்!