ETV Bharat / state

கால்வாய்கள் ஆக்கிரமிப்பு: மாவட்ட ஆட்சியரிடம் விவசாயிகள் புகார் - madurai district news

மதுரை: சாத்தியார் அணைக்கு தண்ணீர் வரும் கால்வாய்களை ஆக்கிரமிப்பு செய்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் சாத்தியார் அணை பாசன விவசாயிகள் சங்கத்தினர் புகார் மனு அளித்தனர்.

மாவட்ட ஆட்சியரிடம் விவசாயிகள் புகார்
மாவட்ட ஆட்சியரிடம் விவசாயிகள் புகார்
author img

By

Published : Dec 2, 2020, 8:35 PM IST

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் ஒன்றியத்திற்குட்பட்ட சாத்தியார் அணைக்கு தண்ணீர் வரும் கால்வாய்களை சில நபர்கள் ஆக்கிரமித்துள்ளனர். இதுகுறித்து மாவட்ட ஆட்சியரிடமும், பொதுப்பணித்துறை அலுவலர்களிடமும் இன்று (டிச.2) சாத்தியார் அணை பாசன விவசாயிகள் சங்கத்தினர் புகார் மனு அளித்தனர்.

இதுகுறித்து ஈடிவி பாரத் ஊடகத்திடம் கீழ சின்னம்பட்டி ஊராட்சித் தலைவர் ரமேஷ் செல்வராஜ் தெரிவித்ததாவது, "சாத்தியார் அணைக்கு தண்ணீர் வரும் கால்வாய்களை சில நபர்கள் ஆக்கிரமித்துள்ளனர். இதனால் சிறு மலைப்பகுதியில் இருந்து அணைக்கு வருகின்ற தண்ணீர் தடுக்கப்படுகிறது. இதன் காரணமாக அப்பகுதியை சுற்றியுள்ள பொதுமக்கள், விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மாவட்ட ஆட்சியரிடம் விவசாயிகள் புகார்

உடனடியாக ஆக்கிரமிப்பு செய்த நபர்கள் மீது நடவடிக்கை எடுத்து சாத்தியார் அணைக்கு தண்ணீர் வரும் கால்வாய்களை தூர்வார வேண்டும். மேலும் வைகை ஆற்றில் வெள்ளம் வரும்போது அதன் உபரி நீர் சாத்தியார் அணையில் நிரம்பும் வகையில் அரசு வழிவகை செய்ய வேண்டும். இல்லையென்றால் கரோனா ஊரடங்கு முடிவுக்கு வந்த பின்னர் பொதுமக்களை திரட்டி மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும்" என்றார்.

இதையும் படிங்க: டெல்லியில் போராட்டம்.. திருப்பூரில் ஏர் கலப்பை பேரணி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.