ETV Bharat / state

முல்லை பெரியாற்றில் தண்ணீர் திறக்க வேண்டி விவசாயிகள் போராட்டம்! - முல்லை ஆற்றில் தண்ணீர் திறக்க கோரி விவசாயிகள் போராட்டம்

மதுரை: முல்லை பெரியாறு கால்வாயிலிருந்து தண்ணீர் திறக்கக் கோரி 500க்கும் மேற்பட்ட விவசாயிகள், பொதுப்பணித் துறை அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தினர்.

போராத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்
author img

By

Published : Nov 25, 2019, 7:48 PM IST

சிவகங்கை மாவட்டத்திற்குட்பட்ட பதிவு செய்யப்பட்ட முல்லை பெரியாறு ஆயக்கட்டு 5பிரதான கால்வாய் வழியாக செல்லும் தண்ணீரின் மூலமாக 15ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெறும். கடந்த சில தினங்களுக்கு முன்பாக சிவகங்கை மாவட்ட விவசாயிகள் சார்பில் தண்ணீர் திறக்கக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்டனர்.

முல்லை பெரியாறு கால்வாயில் இருந்து 100அடி அளவிற்கு தண்ணீர் திறக்கப்படும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் வாக்குறுதி அளித்தனர். 14நாட்கள் மட்டுமே தண்ணீர் திறக்கப்பட்டு திடீரென முன்னறிவிப்பின்றி நிறுத்தப்பட்டது.

பயிர்கள் நாற்று நடப்பட்ட நிலையில் தண்ணீரின்றி பயிர்கள் கருக தொடங்கியுள்ளது. தங்களுக்கு அளிக்க வேண்டிய தண்ணீரை திறந்துவிடக் கோரி சிவகங்கை மாவட்ட விவசாயிகள் 500க்கும் மேற்பட்டோர் மதுரையிலுள்ள பொதுப்பணித்துறை அலுவலகத்தில் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது பொதுப்பணித்துறை, தமிழ்நாடு அரசுக்கு எதிராக விவசாயிகள் கண்டன கோஷங்களை எழுப்பினர். தொடர்ந்து அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியும் முறையாக பதில் அளிக்காததால் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

போராத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்

விவசாயிகள் போராட்டத்தையடுத்து 100க்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பெரியாறு கால்வாயிலிருந்து 150கனஅடி வீதம் 30நாட்களுக்கு தண்ணீர் திறக்க வேண்டும் எனவும் பொதுப்பணித்துறை சார்பில் மேலூர் டிவிஷனை சிவகங்கை டிவிஷன் என தனியாக பிரிக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் வலியுறுத்தினர்.

பொதுப்பணித்துறை சிவகங்கை மாவட்ட விவசாயிகளை புறக்கணிப்பதாகவும் அண்டை மாநில விவசாயிகளை போல பாரபட்சம் காட்டுவதாகவும் கோரிக்கை நிறைவேறும் வரையில் போராட்டம் நீடிக்கும் என விவசாயிகள் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: நகராட்சியை கண்டித்து போராட்டம் நடத்திய விடுதலைச் சிறுத்தைகள் கட்சி!

Intro:*முல்லை பெரியாறு கால்வாயிலிருந்து தண்ணீர் திறக்க கோரி சிவகங்கை மாவட்ட விவசாயிகள் 500க்கும் மேற்பட்டோர் பொதுப்பணித்துறை அலுவலகத்தில் குடியேறும் போராட்டம்*Body:
*முல்லை பெரியாறு கால்வாயிலிருந்து தண்ணீர் திறக்க கோரி சிவகங்கை மாவட்ட விவசாயிகள் 500க்கும் மேற்பட்டோர் பொதுப்பணித்துறை அலுவலகத்தில் குடியேறும் போராட்டம்*

*தமிழக பொதுப்பணித்துறை விவசாயிகளை வஞ்சிக்கிறது மனிதாபமற்ற செயல்களில் ஈடுபடுகிறது என விவசாயிகள் வேதனை*

சிவகங்கை மாவட்டத்திற்கு உட்பட்ட பதிவு செய்யப்பட்ட முல்லை பெரியாறு ஆயக்கட்டு 5பிரதான கால்வாய் வழியாக செல்லும் தண்ணீரின் மூலமாக 15ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெறும் இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக சிவகங்கை மாவட்ட விவசாயிகள் சார்பில் தண்ணீர் திறக்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்ட நிலையில் முல்லை பெரியாறு கால்வாயில் இருந்து 100அடி அளவிற்கு தண்ணீர் திறக்கப்படும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் வாக்குறுதி அளித்த நிலையில் 14நாட்கள் மட்டுமே தண்ணீர் திறக்கப்பட்டு திடிரென முன்னறிவிப்பின்றி நிறுத்தப்பட்டது. இந்நிலையில் பயிர்கள் நாற்று நடப்பட்ட நிலையில் தண்ணீரின்றி பயிர்கள் கருக தொடங்கியுள்ளது. இந்நிலையில் தங்களுக்கு அளிக்க வேண்டிய தண்ணீரை திறந்துவிட கோரி சிவகங்கை மாவட்ட விவசாயிகள் 500க்கும் மேற்பட்டோர் மதுரையிலுள்ள பொதுப்பணித்துறை அலுவலகத்தில் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பொதுப்பணித்துறை மற்றும் தமிழக அரசுக்கு எதிராக விவசாயிகள் கண்டன கோஷங்களை எழுப்பினர். தொடர்ந்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியும் முறையாக பதில் அளிக்காத நிலையில் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.
விவசாயிகள் போராட்டத்தையடுத்து 100க்கும் மேற்பட்ட போலிசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். விவசாயிகள் போராட்டத்தால் பொதுப்பணித்துறை அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பெரியாறு கால்வாயிலிருந்து 150கன அடி வீதம் 30நாட்களுக்கு தண்ணீர் திறக்க வேண்டும் எனவும், பொதுப்பணித்துறை சார்பில் மேலூர் டிவிஷனை சிவகங்கை டிவிஷன் என தனியாக பிரிக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் வலியுறுத்தினர்.

பொதுப்பணித்துறை சிவகங்கை மாவட்ட விவசாயிகளை புறக்கணிப்பதாகவும், அண்டை மாநில விவசாயிகளை போல பாரபட்சம் காட்டுவதாகவும், கோரிக்கை நிறைவேறும் வரையில் போராட்டம் நீடிக்கும் என விவசாயிகள் தெரிவித்தனர்Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.