மதுரை மாவட்டம், பரவை பகுதியைச் சேர்ந்தவர் ராஜா. இவர் மதுரை தத்தனேரி மின் மயானத்தில் பதிவாளராகப் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி விஜயா, வளர்ப்பு மகனான பிரேம்குமார் ஆகியோரிடையே ராஜாவுக்கு சில ஆண்டுகளாக சொத்து தகராறு இருந்து வந்துள்ளது. இந்நிலையில், ராஜவை பழி வங்கும் நோக்கில் சில தினங்களுக்கு முன்பு ராஜா பணியாற்றும் மின் மயானத்துக்கு சென்ற மனைவி விஜயா, மகன் பிரேம் ஆகிய இருவரும் அலுவலகத்தின் பதிவாளர் அறையில் இருந்த அரசு பதிவேட்டை எடுத்துச் சென்றுள்ளனர்.
இதுகுறித்து, பதிவாளர் ராஜா செல்லூர் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார். இதனை தொடர்ந்து மனைவி, மகன் மீது ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.