ETV Bharat / state

திருமங்கலத்தில் போலி மருத்துவர் கழுத்தறுத்து கொலை - போலீசார் விசாரணை - திருமங்கலத்தில் போலி மருத்துவர் கழுத்தறுத்து கொலை

மதுரை: திருமங்கலம் அருகே முன்விரோதம் காரணமாக போலி மருத்துவர் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

murder
murder
author img

By

Published : Mar 6, 2020, 3:30 AM IST

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகேயுள்ள ஆலம்பட்டியைச் சேர்ந்தவர் பால்ராஜ் (70). இவருக்கு இரண்டு மகளும், ஒரு மகனும் உள்ளனர். விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை பூர்வீகமாகக் கொண்ட பால்ராஜ், தனியார் மருந்துவமனையில் மருத்துவ உதவியாளராக பணிபுரிந்துள்ளார். அதைவைத்து, ஆலம்பட்டியில் 20 ஆண்டுகளாக தன்னை மருத்துவர் எனக் கூறிக்கொண்டு அப்பகுதியில் வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து மருத்துவம் பார்த்து வந்துள்ளார்.

பால்ராஜ் மனைவி செல்வி உடல் நலக்குறைவால் உயிரிழந்து விட்டார். தனது மூன்று பிள்ளைகளுக்கும் திருமணம் முடித்த நிலையில் பால்ராஜ் வீட்டில் தனியாக இருந்து மருத்துவம் பார்த்து வந்துள்ளார். இவ்வேளையில், பால்ராஜ் வீட்டின் அருகே வசித்து வந்த பாலசுப்ரமணி என்பவர் இன்று அதிகாலை நான்கு மணிக்கு காலைக்கடன் கழிப்பதற்காக வெளியில் வந்தார். அப்போது பால்ராஜ் வீட்டில் விளக்குகள் எரிந்து கொண்டிருப்பதைக் கண்ட அவர் பால்ராஜ் வீட்டுக் கதவை தட்டியபோது கதவு தானாக திறந்துள்ளது.

இதைக் கண்டு சந்தேகமடைந்த பாலசுப்ரமணி, வீட்டினுள் சென்று பார்த்த போது பால்ராஜ் கழுத்தறுக்கப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் பிணமாகக் கிடந்தார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர், அக்கம் பக்கத்தினரிடம் சம்பவத்தை கூறி, உடனடியாக திருமங்கலம் தாலுகா காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருமங்கலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் தலைமையிலான காவல்துறையினர், இறந்தவரின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ராசாசி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர். காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில், சில ஆண்டுகளுக்கு முன்பு பால்ராஜ் போலி மருத்துவர் என தெரிய வந்ததையடுத்து, பால்ராஜ் அவரது மனைவி செல்வி ஆகிய இருவரையும் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். பின்னர் வெளியில் வந்த பால்ராஜ், மறுபடியும் அதே தொழிலை செய்துவந்துள்ளார்.

பால்ராஜ் ஆலம்பட்டியில் சொந்தமாக இடம் வைத்துள்ளார். இடம் தொடர்பாக ஏற்கனவே சிலருடன் முன்விரோதம் இருந்ததாகக் கூறப்படுகிறது. இட பிரச்னையால் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரித்து வருவதாக காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இடப் பிரச்சினை காரணமா அல்லது வேறு ஏதாவது காரணம் உள்ளதா எனக் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: நாமக்கல்லில் அமையவுள்ள மருத்துவக் கல்லூரி அடிக்கல் நாட்டு விழா - முதலமைச்சர் பங்கேற்பு

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.