ETV Bharat / state

நோய்தொற்று பரவாமல் தடுக்க பிரத்யேகமாக முகக் கவசம் தயாரிக்கும் நிறுவனம்! - Madurai Latest News

மதுரை: கரோனா வைரஸ் தொற்று அதிகமாக பரவிவரும் சூழலில், நோய்தொற்று பரவாமல் தடுக்க மதுரையைச் சேர்ந்த தனியார் நிறுவனம் அரசு நிர்ணயித்த விலையிலேயே பிரத்யேகமாக முகக் கவசம் தயாரித்து வருகிறது.

corona-mask-manufacturing in Madurai
corona-mask-manufacturing in Madurai
author img

By

Published : Mar 24, 2020, 1:06 PM IST

கரோனா வைரஸ் அச்சத்தால் பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, வைரஸ் பரவலை கட்டுப்படுத்தவும் முகக் கவசம், கையுறை போன்றவற்றை பயன்படுத்த மத்திய மாநில அரசுகள் அறிவுறுத்தியுள்ளன. இதையடுத்து அவற்றின் தட்டுப்பாடு அதிகரித்துள்ளது. சில இடங்களில் அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டும் வருகிறது.

இந்நிலையில் மதுரை தனக்கங்குளம் பகுதியில் அமைந்துள்ள தனியார் உற்பத்தி நிறுவனத்தில் சுமார் 10க்கும் மேற்பட்ட பயனாளர்கள் நாளொன்றுக்கு 5000க்கும் மேற்பட்ட மூன்றடுக்கு பாதுகாப்பு கொண்ட முகக் கவசங்கள் உற்பத்தி செய்கின்றனர். மேலும் நோயாளிகள், மருத்துவர்கள், செவிலியர்கள் ஆகியோர் அறுவைச் சிகிச்சையின்போது பயன்படுத்தும் ஆடைகளையும் உற்பத்தி செய்துவருகின்றனர்.

நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவரிடமிருந்து மற்றவருக்கு எளிதில் பரவாதவாறு பிரத்தியோக உடையும் தயாரிக்கப்பட்டு வருகிறது. இதனை முதற்கட்டமாக சீனாவிற்கு முகவர்கள் மூலம் ஏற்றுமதி செய்யப்பட்டு வருவதாகவும், குறிப்பாக இந்த உற்பத்தி நிலையத்தில் தயார் செய்யப்படும் முகக்கவசம் அனைத்தும் முறையாக சுத்திகரிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.

நோய்தொற்று பரவாமல் தடுக்க பிரத்யேகமாக முகக்கவசம் தயாரிக்கும் நிறுவனம்

நோய்க் கிருமிகள் தொற்றை எதிர்கொள்ளும் உலகின் மிகச் சிறந்த பிரத்தியேக திரவம் உபயோகித்து தயாரிப்பதால் இதனை அச்சமின்றி மருத்துவர்களும், செவிலியர்களும் பயன்படுத்தலாம் என்று தெரிவிக்கின்றனர். ETO என்றழைக்கப்படும் நோய்க்கிருமிகளை அழிக்கும் இயந்திரத்தில் சுமார் 5 மணி நேரத்திற்கு வைக்கப்பட்ட பின்னரே முகக் கவசங்கள், ஆடைகள் தயாரிப்பதாகவும் கூறுகின்றனர்.

நோய்த் தொற்றை தடுக்கும் ஆர்கானிக் திரவத்தால் நனைக்கப்பட்ட கைகுட்டையும் தயாரிக்கப்படுவதோடு, இந்த கைக்குட்டையானது எத்தனை முறை துவைத்தாலும் தன்மை மாறாதிருக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது வரையில் அரசு நிர்ணயித்து இருக்கக்கூடிய விலையிலேயே உற்பத்திசெய்து மருத்துவமனைகளுக்கு விற்பனை செய்துவருவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: கரோனா நிவரணம்: முதலமைச்சரின் முக்கிய அறிவிப்புகள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.