மதுரை: வேளாங்கண்ணி - எர்ணாகுளம் இடையே வாராந்திர சிறப்பு ரயில்களின் சேவையை மேலும் ஒரு மாதத்திற்கு நீட்டித்துள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி, ரயில் எண். 06035/06036 எர்ணாகுளம் - வேளாங்கண்ணி - எர்ணாகுளம் வாராந்திர சிறப்பு கட்டண சிறப்பு ரயில் சேவை கீழே விவரிக்கப்பட்டுள்ளபடி நீட்டிக்கப்பட்டுள்ளது.
எர்ணாகுளத்தில் இருந்து சனிக்கிழமைகளில் 01.10 மணிக்கு புறப்பட்டு மறுநாள் 05.40 மணிக்கு வேளாங்கண்ணி சென்று சேரும் ரயில் எண். 06035 எர்ணாகுளம் - வேளாங்கண்ணி வாராந்திர சிறப்பு கட்டண சிறப்பு ரயில், 04, 11, 18 & 25 மார்ச், 2023 ஆகிய தேதிகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
வேளாங்கண்ணியில் இருந்து ஞாயிற்றுக்கிழமைகளில் 06.40 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் 11.40 மணிக்கு எர்ணாகுளம் சென்று சேரும் ரயில் எண். 06036 வேளாங்கண்ணி - எர்ணாகுளம் வாராந்திர சிறப்பு கட்டண சிறப்பு ரயில் 05, 12 ,19 & 26 மார்ச், 2023 ஆகிய தேதிகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
மேலும், ரயில்களின் நேரம், நிறுத்தங்கள் மற்றும் அமைப்பில் எந்த மாற்றமும் இல்லை. மேற்கண்ட சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு எப்போதும் போல நடைபெறுகிறது என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இதையும் படிங்க:ஈரோடு இடைத்தேர்தலில் பணம் கொடுத்துவிட்டால் மக்கள் மனதை வெல்ல முடியாது - துரை வைகோ