மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட சம்மட்டிபுரம் சுகாதார ஆய்வாளர் அலுவலகத்தில் ஊழியராக கோபால் என்பவர் பணியாற்றுகிறார். இவரும் அதே அலுவலகத்தில் ஒப்பந்தப் பணியில் உள்ள ஹெலன் மேரி என்பவரும் இறப்பு சான்றிதழ் பெறுவதற்கு தலா ரூ.200 வீதம் 10 சான்றிதழ்களுக்கு ரூ. 2 ஆயிரம் லஞ்சமாக ஒருவரிடம் கேட்டனர். இந்த காணொலி சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
பிறப்பு, இறப்பு சான்றிதழ் பெறுவதற்கு ஊழயர்கள் லஞ்சம் கேட்பதால், அதனை ஆன்லைனிலேயே பெறலாம் என அரசு அறிவித்தது. இந்நிலையில் சம்மட்டிபுரம் சுகாதார ஆய்வாளர் அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்களின் இச்செயல் அப்பகுதி மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அந்த ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதையும் படிங்க: லஞ்சம் வாங்கிய போது கையும் களவுமாக சிக்கியவரிடம் விசாரணை!